உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

511

கூடுவதாகக் கொண்டு அதனை யொன்றிற்கு உவமையாக்கி யுரைப்பது மருட் கையுவமையாம். இதனைத் தண்டியாசிரியர் கூடாவு வமை யென்பர்.

எடு :

66

தாகம் பெறநுகர்தீந் தண்மருந்து கைத்தழலின் வேகம் பயின்ற விதிபோலு - மோகம்

படையாத மாறன் பனிவரைமே லென்னோய் துடையாது நீயுரைக்குஞ் சொல்.”

மலர்ச்சியணி

சிறப்புப் பொருளைச் சாதித்தற்குப் பொதுப் பொருளையும், மீண்டும் அப்பொதுப் பொருளைச் சாதித்தற்கு மற்றொரு சிறப்புப் பொருளையுஞ் சொல்லுதல் மலர்ச்சியணியாம்.

எடு

"தேடு மணிபலவுஞ் சேரிமைய மால்வரைக்குக் கூடுபனி யாலோர் குறைவுண்டோ - நீடுபல இன்குணத்திற் குற்றமொன் றிந்து பலகதிரின் புன்களங்கம் போலடங்கிப் போம்.”

மறுபொருளுவமை

இது உவமைகளுள் ஒன்று. முன்னர் வைத்த பொருட்கு ஒப்பாகக் கூடிய ஓர் பொருளைப் பின்னர் வைத்துக் கூறுவது மறுபொருளுவமையாம்.

எடு :-

“அன்னைபோ லெவ்வுயிருந் தாங்கு மனபாயா நின்னையா ரொப்பார் நிலவேந்தர் - அன்னதே வாரிபுடை சூழ்ந்த வையகத்திற் கில்லையால் சூரியனே போலுஞ் சுடர்.

மறையணி

பொதுக் குணத்தினால் இரண்டு பொருள்களுக்கு வேற்றுமை தோன்றாமையாம். இதனை வடநூலார் 'மீலிதாலங்கார’

மென்பர்.