உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

529

தனுள், நல்வினைப் பயன் தீதாகவும், தீவினைப் பயன் நன்மையாகவும் வந்து விபரீதமானது காண்க.

விபரீதவுவமை

இது உவமை

து

வகைகளுள் ஒன்று. தொன்று தொட்டு உவமையாய் வருவதனைப் பொருளாக்கிப் பொருளாய் வருவதனை உவமையாக்கி யுரைப்பது விபரீத உவமையாம்.

எடு :-

66

திருமுகம் போன் மலருஞ் செய்ய கமலம்.’

விபாவனையணி

وو

ஒன்றன் செயலைக் கூறுங்கால் அச்செயலுக்குப் பலரும் அறியவரும் காரணத்தை நீக்கிப் பிறிதொரு காரணத்தை இயல்பாக வேனும் குறிப்பாகவேனும் வெளிப்பட வுரைப்பது விபாவனையணியாகும். அது அயற்காரணவிபாவனை, இயல்பு விபாவனை, வினையெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தும் விபாவனை, பொதுவகையால் காரணம் விலக்கிக் காரியம் புலப்படுத்தும் விபாவனை எனப் பலவகைப்படும்.

எடு :-

“தீயின்றி வேந்தமியோர் சிந்தை செழுந்தேறல் வாயின்றி மஞ்ஞை மகிழ்தூங்கும் - வாயிலார் இன்றிச் சிலரூட றீர்ந்தா ரமரின்றிக்

கன்றிச் சிலைவளைக்குங் கார்.”

ஈண்டு வேதல் முதலியவற்றிற்கு உலகறி காரணமாகிய நெருப்பு முதலியவைகளை நீக்கக் கார்ப்பருவ மென்பதாகிய ஒரு காரணம் ஊகிக்கப் படுவதால் இது விபாவனை யணியாயிற்று.

வியநிலையுருவகம்

இது உருவக அணி வகைகளுள் ஒன்று. ஒன்றன் அங்கம் பலவற்றையும் ஒரு செய்யுளில் கூறி, அவற்றுள் சிலவற்றை யுருவகஞ்செய்து சிலவற்றையுருவகஞ் செய்யாது உறுப்பியை யுருவகஞ் செய்து பாடுவது வியநிலையுருவகமாகும்.