உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

531

விரியுருவக அணி

இது உருவக அணி வகைகளுள் ஒன்று. ஆகிய ஆக என்னும் உருவக உருபுகள் விரிந்து நிற்கப் பாடுவது விரியுருவக அணியாம். எடு :-

"கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக அங்கை மலரா வடிதளிராத் - திங்கள்

அளிநின்ற மூர லணங்கா மெனக்கு வெளிநின்ற வேனிற் றிரு.”

விரூபகவுருவகம்

இது உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு பொருட்குக் கூடாததன்மை பலவுங்கூட்டி உருவகஞ் செய்து பாடுவது விரூபக வுருவகமாகும். இதனை விருத்த வுருவகம் என்பார் மாறனலங் காரமுடையார்.

எடு :-

"தண்மதிக்குத் தோலாது தாழ்தடத்து வைகாது முண்மருவுந் தாண்மேன் முகிழாது - நண்ணி இருபொழுதுஞ் செவ்வி யியல்பாய் மலரும் அரிவை வதனாம் புயம்.

விரைவுயர்வு நவிற்சியணி

இதுவும் உயர்வு நவிற்சியணி வகைகளுள் ஒன்று. காரண வுணர்ச்சி மாத்திரத்திலே காரிய முண்டாதலைக் கூறுவது விரைவுயர்வு நவிற்சியணியாகும்.

எடு :-

66

அருளாக்கு நல்லறமுண் டாக்குமின்புண் டாக்கும்

தெருளாக்கு மென்றுளங்கொல் செம்மல் - பொருளாக்கற்

கேழையான் செல்வ னெனப்புகலா நிற்பவிரல்

ஆழிவளை யாயிற் றவட்கு."

இதில், பிரிவுணர்ச்சியினாலே தானே நாயகியின் வாட்டாகி காரியம் மோதிரம் வளையாயிற் றென்பதனால் விளங்கிற்று.