உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

)

தமிழ் எழுத்திற் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும் :

43

முதலுஞ் சார்புமாகிய தமிழெழுத்துகளில் (40) றகர னகர ழகர எகர ஓகரங்களைந்தும், உயிர்மெய்யும் உயிரளபெடையு மல்லாத சார்பெழுத்தெட்டும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பெழுத்துகளாம். எஞ்சிய இருபத்தேழு எழுத்துகளும் வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உரிய பொது எழுத்து களாகும். இது நன்னூல் உரைக்கும்முறை. தொல்காப்பியம் முதல் எழுத்து முப்பது சார்பெழுத்து மூன்று; ஆக முப்பத்து மூன்று எழுத்துகள் என்னும்.

து

தற்கிழமைப் பொருள் :

தன்னோடு ஒற்றுமையுடைய பொருள் தற்கிழமைப் பொருளாம். அது உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன் கூட்டமும், பலவின் கூட்டமும், ஒன்று திரிந் தொன்றாயதும் என அறுவகைப்படும். கிழமை = உரிமை.

உறுப்புத்தற்கிழமை

(எ.டு) சாத்தனது கை

=

சாத்தனது கருமை =

=

பண்புத்தற்கிழமை

சாத்தனது வரவு = தொழிற்றற்கிழமை

நெல்லது குப்பை

=

ஒன்றன்கூட்டத்தற்கிழமை

சேனையது தொகுதி= பலவின்கூட்டத்தற்கிழமை

மஞ்சளது பொடி =

ஒன்றுதிரிந்தொன்றாயதன் தற்கிழமை

தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும் விகுதி :

கொள் என்னும் விகுதி தற்பொருட்டுப் பொருளை யுணர்த்தும்

(எ.டு) அடித்துக் கொண்டான்

தற்சமம் :

வடமொழிக்குந் தமிழ் மொழிக்கும் பொதுவெழுத் தாலாகி வேற்றுமையின்றித் தமிழில் வந்து வழங்கும் வடசொல் தற்சமம் எனப்படும்.

(எ.டு) அமலம், கமலம், குங்குமம்.

(தற்பவக்குறிப்பு நோக்குக)