உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தற்பவம் :

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்துகளாலும், பொதுவும் சிறப்புமாகிய இவ்விருவகை எழுத்துகளாலும் அமைந்துள்ளன வான வடமொழிச் சொற்கள் தமிழில் திரிந்தும் திரியாமலும் வந்து வழங்குவன தற்பவம் எனப்படும்.

(எ-டு) சுகி, போகி

தனிமொழி :

சிறப்பெழுத்தால் இயைந்தன

அரி, அரன், சமயம் ஈரெழுத்தாலும் இயைந்தன. (இவையும் தமிழ் மூலங்களே என்பது வேர்ச்சொல் ஆய்வால் விளங்கும்)

பகாச்சொல்லேனும் பகுசொல்லேனும் ஒன்று, நின்று தம்தம் பொருளைத் தருவது தனிமொழியாம்.

(எ.டு) நிலம், நடந்தான்.

தனிக் குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் ஞ, ந க்களுக்கேற்பத் திரிதல் :

தனிக் குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், வருமொழி முதலில் ஞ, நக்கள் வருமாயின் அவ்வெழுத்தாகத் திரியும்.

(எ-டு) எம் + ஞானம்

எம் + நூல்

=

எஞ்ஞானம்

எந்நூல்

நும் + ஞானம் = நுஞ்ஞானம்

தம் + நூல் = தந்நூல்

நம் + நூல் = நந்நூல்.

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள் வல்லினத் தோடு புணர்தல் :

தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த லகர ளகரங்கள் வருமொழி முதலில் வல்லினம் வந்தால் எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், ஒருகால் இயல்பாயும். ஒரு கால் திரிபாயும் வரும்.

(எ-டு) கல் + குறிது

முள் + சிறிது

||

கற்குறிது

முட்சிறிது )

}

எழுவாய்த்

தொடர்