உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

45

அல் + பகல்

அற்பகல்

பண்புத்

உள் + புறம்

உட்புறம்

தொகை

தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் வல்லினத்தில் திரிதல் : தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், அல்வழி வேற்றுமை ஆகிய இருவழியிலும் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.

(எ.டு) அல்வழி

கங்குறிது

அஞ்செவி

செங்கோழி

வேற்றுமை

கங்குறுமை, அஞ்சிறுமை

நங்கை,

தஞ்செவி,

எந்தலை.

தனிக்குறில் மெய்க்குச் சிறப்பு விF :

தனிக்குற்றெழுத்தை யடுத்து நின்ற மெய் வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் இருவழியிலும் இரட்டித்து நிற்கும்.

(எ.டு) மண் + அழகிது

மண்ணழகிது அல்வழி

பொன் + அணி

=

பொன்னணி

வேற்றுமை

'தன்' என்பதற்குச் சிறப்பு விதி :

தன் என்னும் மொழியின் இறுதி னகரம் வல்லினம் வரின் ஒருகாற்றிரிந்தும், ஒரு காற்றிரியாதும் நிற்கும்.

(எ.டு) தன் + பகை

=

தன்பகை, தற்பகை.

தன்மைப் பன்மை வினைமுற்று :

அம்,ஆம், எம், ஏம், ஓம் என்பவற்றை இறுதியில் உடைய னைச்சொற்கள் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். செய்யுளில் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விறுதிகள் அன்றி கும், டும், தும், றும் என்னும் இறுதிகளும் வழங்கும்.