உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

‘தெங்கு' என்பதற்குச் சிறப்பு விதி :

49

வருமொழியில் காயென்னுஞ் சொல் வருமாயின் தெங் கென்னும் நிலைமொழி முதல் நீண்டு ஈற்றில் உள்ள உயிர்மெய் நீங்கும்.

(எ.டு) தெங்கு + காய்

=

தேங்காய்

(நீர் தேங்கி நிற்கும் காய் ஆதலால் தேங்கு + காய் தேங்காய் ஆதல் கண்கூடு.)

'தெவ்' என்பதற்குச் சிறப்பு விதி :

=

தெவ் என்னும் பகைமையை யுணர்த்தும் பெயர், யகர மல்லாத மெய்களோடு புணருமிடத்துத் தொழிற்பெயர்போல உகரச்சாரியை பெற்று முடியும். மகரம் வரின் உகரச்சாரியை பெறுதலேயன்றி ஒரோவிடத்து வகரமெய் மகரமெய்யாகத் திரியவும் பெறும்.

அல்வழி

(எ.டு) தெவ் + கடிது

=

தெவ்வுக்கடிது

தெவ் + மாண்டது = தெவ்வுமாண்டது

தெவ் + வந்தது

==

தெவ்வு வந்தது

தெவ்வுமன்னர்

தெவ் + மன்னர் தெவ் + மன்னர்

தெவ் + கடுமை

=

=

=

தெவ் + மாட்சி

=

தெம்மன்னர்

தெவ்வுக்கடுமை

தெவ்வுமாட்சி

தெவ் + வன்மை = தெவ்வுவன்மை

தெவ் + முனை

=

தெவ்வு முனை

=

தெம்முனை

தெவ் + முனை

‘தேன்' என்னும் மொழிக்குச் சிறப்பு விதி :

தேன் என்னுஞ் சொல் மூன்றின மெய்களும் வருமொழி முதலில் வந்தால் இறுதியிலுள்ள னகரமெய் இயல்பாதலும், மெல்லினம் வந்தால் அவ்விறுதி னகர மெய் இயல்பாதலேயன்றிக் கெடுதலும், வல்லினம் வந்தால் அவ்வீற்று னகரமெய் இயல்பாதலேயன்றிக் கெடவந்த வல்லினமாவது அதற்கு இனமான மெல்லினமாவது மிகுதலும் விதியாகும்.