உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரம் பிறக்குமிடம் :

எழுத்து

51

மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்த நகரம் பிறக்கும்.

நகர வீறு வன்கணம், மென்கணம், இடைக்கணம் ஆகியவற்றோடு புணர்தல் :

நகரவீறு வன்கணத்தோடு புணருங் காலத்து வல்லெழுத்து மிக்கும் நிலை மொழியிறுதி உகரம் பெற்றும் முடியும். மென்கணம், இடைக்கணம் ஆகியவற்றோடு புணருங் காலத்து நிலை மொழி இறுதி உகரம் பெற்று முடியும்.

(எ-டு) பொருந் + கடிது - பொருநுக் கடிது

பொருந் + ஞான்றது பொருநு ஞான்றது பொருந் + வலிது வ

பொருநு வலிது.

‘நாழி', ‘உரி' என்பவற்றிற்குச் சிறப்பு விதி :

உரி என்னும் முகத்தலளவுப் பெயர் வருமொழியாக வந்தால், நிலைமொழியாக நின்ற நாழி என்னும் முகத்தலளவுப் பெயரினது ஈற்றிலுள்ள ‘ழி' என்னும் உயிர்மெய் நீங்க, டகர மெய் வரும். நிலைமொழியாய் நின்ற உரி என்னும் முகத்தலளவுப் பெயரின் பின் அவ்வுயிர் மெய் வருவதற்கேற்ற மொழிகள் வருமொழியாக வந்து புணர்ந்தால் யகர வுயிர் மெய் வரும்.

L

(எ.டு) நாழி + உரி = நாடுரி = 'ழி' கெட, டகரம் தோன்றிற்று

உரி + உப்பு

உரி + பயறு

உரி + மிளகு

உரியவுப்பு

உரியபயறு

உரிய மிளகு

உரியின்பின் யகரவுயிர்மெய் தோன்றிற்று.

உரி + வரகு உரிய வரகு

=

நான்கு என்பதற்குச் சிறப்பு விதி :

இறுதி யுயிர்மெய் கெட நின்ற நான்கென்னும் எண்ணினது னகரமெய் வருமொழி முதலில் உயிரும் இடையினமும் வருமிடத்து லகரமாகவும் வல்லினம் வருமிடத்து றகரமாகவும் மெல்லினம் வருமிடத்துத் திரியாமலும் வரும்.