உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் 4

(எ-டு) நான்கு + ஆயிரம்

நான்கு + வகை

நாலாயிரம்

நால்வகை

நான்கு + கவி

நான்கு + பால்

நாற்கவி நாற்பால்

நான்கு + மணி

நான்கு + நாழி

நான்மணி

நானாழி

}

உயிரும் இடையினமும் வர ஈறுகெட்டு னகரம் லகரமாயிற்று

வலிவர ஈறு கெட்டு னகரம் றகரமாயிற்று

மெலிவர ஈறு கெட்டு னகரம் திரியாது நின்றது

நிகழ் கால இடைநிலை :

கிறு, கின்று, ஆநின்று ஆகிய இம்மூன்றும் ஆண்பால் முதலிய ஐந்து பால்களிலும், தன்மை முதலிய மூன்று இடங் களிலும், நிகழ்காலத்தைக் காட்டுகின்ற வினைப் பகுபதங்களின்

இடைநிலைகளாம்.

(எ.டு) படிக்கிறான், படிக்கின்றான், படியாநின்றான்.

நிகழ்காலமும் எதிர்காலமுங் காட்டும் விகுதி :

உம் என்னுஞ் செய்யு மென் முற்று விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங் காட்டும்.

(எ.டு) உண்ணும்.

நிலைமாறுதல் :

எழுத்துகள் ஒன்று நின்றவிடத்து வேறோர் எழுத்துச் சென்று மாறி நிற்றற்கு நிலை மாறுதல் என்று பெயர்.

(எ.டு) மிஞிறு ஞிமிறு

தசை

சதை

கொப்பளம் பொக்களம்

'நின்' என்பவற்றிற்குச் சிறப்புவிதி :

நின் என்னும் மொழியின் இறுதி னகரம், வல்லினம் வரின் இயல்பாகும்.

(எ.டு) நின் + பகை

=

நின்பகை

நீளல் :

இயல்பாயிற்று.

விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளுவதற்கு நீளல் என்று பெயர்.