உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு) பொழுது

பெயர்

நெட்டெழுத்துகள் :

எழுத்து

போழ்து

பேர்.

53

உயிரெழுத்துகளில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழு எழுத்துகளும் இரண்டு மாத்திரை பெற்று நீண்ட ஓசை உடையனவாதலால் நெட்டெழுத்துகளாகும்.

பகரம் பிறக்குமிடம் :

மேலுதடும் கீழுதடும் தம்மிற் பொருந்த ‘ப’ என்னும் எழுத்துப் பிறக்கும்.

பகாப்பதம் (பதம் = சொல்) :

= :

L

பிரிக்கப் படுதலினால் பயனில்லாமல் காரணமின்றி டப்பட்ட குறியாகித் தோன்றிய காலத்திலிருந்தே ஒன்றாகி முடிந்து நடக்கின்ற பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும், இடைச் சொல்லும், உரிச் சொல்லுமாகிய நான்கும் பகாப் பதங்களாகும்.

(எ.டு) காற்று பெயர்ப் பகாப்பதம்

உண்

கொல்

உறு, கழி

வினைப் பகாப்பதம்

இடைப்பகாப்பதம்

உரிப்பகாப்பதம்.

(தொல்காப்பிய மரபில் பொருள் குறியாச் சொல் எதுவும்

இல்லை)

பகுதி (முதனிலை) :

பெயர்ப் பகுபதங்களுள்ளும் வினைப் பகுபதங்களுள்ளும் அவ்வவற்றின் முதலில் நிற்கின்ற பகாப்பதங்களே பகுதியாகும். (பதம் - சொல்)

பகுபதவுறுப்புக்கள் :

முதல் நிலை, இடைநிலை, இறுதிநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகிய ஆறும் பகுபத வுறுப்புக்களாகும்.

பகுபதம் :

பொருளும் இடமுங் காலமுஞ் சினையுங் குணமுந் தொழிலுங் காரணமாக வருகின்ற பெயர்ச் சொற்களும்,