உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் 4

தெரிநிலையாகவுங் குறிப்பாகவுங் காலத்தைக் கொள்ளும் வினைச் சொற்களும் பகுபதங்களாகும்.

பதம் :

எழுத்துகள் தாமே ஒவ்வொன்றாகத் தனித்தும் இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பொருள் தருமாயின் பதமாம். அப்பதம் பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும்.

பத்துடன் இரண்டு புணர்தல் :

பத்தென்னும் எண்ணுப் பெயர் முன் இரண்டென்னும் எண்ணுப் பெயர் வருமாயின், பத் தென்னும் நிலைமொழியிலுள்ள துகரவுயிர் மெய் கெடத் தகரமெய் னகர மெய்யாகத் திரியும்.

(எ.டு) பத்து + இரண்டு = பன்னிரண்டு.

பத்து என்னும் எண்ணுப் பெயர் முன் ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர் புணர்தல் :

பத்து என்னும் எண்ணுப் பெயர் முன்னால் ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர் வந்தாலும் ஈறு கெட்டு இன் பெற்று இயல்பில் திரியாது நிற்கும். து

(எ.டு) பத்து + ஆயிரம்

=

பதினாயிரம்.

பலசில என்பவற்றிற்குச் சிறப்பு விதி :

பல சில என்னும் இவ்விரு சொல்லும் தமக்கு முன்னே தாமே வருமாயின் வருமொழி இயல்பாதலும், மிகுதலும், இறுதியில் நின்ற லகரமெய் றகர மெய்யாகத் திரிதலும். இவ்விரு சொற்களின்முன்னே வேறு சொற்களிலொன்று வந்தால் நிலைமொழியிறுதியில் நின்ற அகரம் விகற்பித்தலும்

உள்ளனவாம்.

(எ-டு) பல பல, சிலசில இயல்பாயின

பலப்பல, சிலச்சில

மிக்கன

பற்பல, சிற்சில அகரம்கெட லகரம் றகரமாயிற்று.

பனை என்பதற்குச் சிறப்பு விதி :

பனை என்னும் பெயரின் முன் கொடி என்னும் பெயர் வருமாயின் வந்த ககரமே மிகுதலும், கசதபக்கள் வருமாயின் நிலைமொழியீற்று ஐகாரம் கெட்டு ‘அம்' சாரியை பெறுதலும், திரள் என்னும் பெயர் வருமாயின் வந்த தகரம் மிகுந்தும், 'ஐ