உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

55

கெட்டு ‘அம்' சாரியை பெற்றும், அட்டு என்னும் பெயர் வருமாயின் நிலை மொழியீற்று ஐகாரம் கெட்டு வருமொழி முதலில் உள்ள அகரம் ஆகாரம் ஆதலும் ஆகும்.

(எ-டு) பனை + கொடி

பனை + காய்

பனைக்கொடி

மிக்கது

பனங்காய்.

ஐ' கெட்டு ‘அம்’ பெற்றது.

‘ஐ’

பனை + திரள் – பனைத்திரள், பனந்திரள் உறழ்ந்தது

பனை + அட்டு பனாட்டு

>

ஐ' கெட்டு அகரம் ஆகாரமாக நீண்டது.

‘பன்’ என்பதற்குச் சிறப்பு விதி :

பன் என்னும் சொல் முதனிலைத் தொழிற்பெயர் போல யகரமல்லாத மெய்கள் வந்தால் உகரச் சாரியை பொருந்தும். பன் + வலிது பன் + வலிது = பன்னுவலிது.

(எ.டு)

( பன், பருத்தி)

‘பாழ்' என்னுஞ் சொல்லிற்குச் சிறப்பு விதி :

பாழ் என்னுஞ் சொல் வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும்.

(எ.டு) பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு.

‘பின்’ என்பதற்குச் சிறப்பு விதி :

பின் என்னும் சொல் முதனிலைத் தொழிற் பெயர் போல யகரமல்லாத மெய்கள் வந்தால் உகரச் சாரியை பொருந்தும்.

(எ.டு) பின் + நன்று பின்னுநன்று.

=

‘பீர்’ என்னுங்கிளவிக்குச் சிறப்புவிதி :

பீர் என்னுஞ் சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முச் சாரியையும் பெற்று முடியும்.

(எ.டு) பீர்ங்கோடு, பீரங்கோடு.

புணர்ச்சி :

மெய்யையும் உயிரையும் முதலும் இறுதியுமாகவுடை பகாப்பதம் பகுபதம் என்ற இரண்டு பதங்களும் தன்னோடு தானும் பிறிதொடு பிறிதுமாய் அல்வழிப் பொருளினாலாவது