உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் 4

வேற்றுமைப் பொருளினாலாவது பொருந்து மிடத்து நிலை மொழியும் வருமொழியும் இயல்பாகவாயினும் விகாரமாக வாயினும் பொருந்துவது புணர்ச்சியாகும்.

புள் என்பதற்குச் சிறப்பு விதி :

புள் என்னுஞ் சொல் இருவழியும் யகரமல்லாத மெய்கள் வந்தால் பொது விதியான் முடிதலே யன்றித் தொழிற் பெயர் போல உகரச் சாரியையும் பெற்று முடியும்.

(எ.டு) புள்ளுக் கடிது, புள்ளுக் கடுமை.

புளி என்பதற்குச் சிறப்பு விதி :

அறுசுவையுள் ஒன்றையுணர்த்தும் புளி என்னும் பெயரின் முன் வல்லினம் வந்து புணர்ந்தால், அவ்வல்லெழுத்து மிகுதலன்றி அதற்கு இனமாகிய மெல்லெழுத்து மிகுதலும் ஆகும்.

(எ.டு)

புறவினா :

புளிங்கறி

புளிஞ்சோறு

புளிம்பாளிதம்

புளிந்தயிர்.

எம்மனிதன், யாங்ஙனம் என்பன போன்ற சொற்களில் எ, யா என்ற வினா எழுத்துகள் சொற்களுக்கு வெளியே இருந்து வினாப்பொருளைத் தருகின்றன. இவ்வாறு பிரிக்கக் கூடியதாய் சொற்களுக்கு வெளியே இருந்து வினாப்பொருளைத் தரும் சொற்களுக்குப் புறவினா என்று பெயர்.

புறச்சுட்டு :

அ, இ, உ என்ற சுட்டெழுத்துகள் சொற்களுக்கு வெளியே நின்று சுட்டுப் பொருளைத் தருமானால் புறச்சுட்டு எனப்படும். (எ.டு) அவ்வரசன், இவ்வழகன், உவ்வரண்.

பூவின் முன் வல்லினம் புணர்தல் :

பூ

பூ என்னும் பெயர்ச் சொல்லின் முன் வரும் வல்லினம் பொது விதியால் மிகுதலேயல்லாமல் அவற்றிற்கு இனமாகிய மெல்லினமும் மிகும்.

(எ-டு) பூ + கொடி பூக்கொடி; பூ + கொடி

=

பூங்கொடி