உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

பொன் என்பதற்குச் சிறப்பு விதி :

57

பொன் என்னுஞ் சொல் பகரமுதன்மொழி வந்தவிடத்துத் தன் ஈற்றின் னகரம் கெட அதன் முன்னர் முறையானே லகரமும் மகரமும் தோன்றி முடியும் செய்யுளிடத்து.

(எ.டு) பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி.

போலியின் இலக்கணம் :

ஒரு சொல்லின் ஓர் எழுத்து உள்ள விடத்தில் அவ்வெழுத்துக்கீடாக வேறோர் எழுத்து நின்றாலும் பொருள் வேறுபடாமல் ஒத்திருப்பது போலியாகும். அது மொழி மூன்றிடத்தும் வரும். (போலி - போல)

(எ.டு) பசல்

பைசல்

அரயர்

அரையர்

கலம்

கலன்

முதற்போலி

இடைப்போலி

கடைப்போலி

ஐந்து

அஞ்சு முற்றும்போலி

மகரத்தின் முன் மயங்கும் எழுத்துகள் :

மகரமெய்யின் முன் ப,

மெய்யெழுத்துகளும் மயங்கும்.

ய, வ என்கின்ற மூன்று

(எ.டு) கொம்பு; கலம்யாது கலம்வலிது.

முதலதே மெய்ம்மயக்கம் ஒரு சொல்லிலே வந்தது.

மற்றவை சொற்புணர்ச்சி, இவ்வாறே வருவன பிறவும்

உள.

மகரத்தின் முன் மெல்லினம் புணர்தல் :

மகரத்தின் முன் மெல்லினம் வருமாயின் இறுதியில் நின்ற மகரம் இருவழியிலுங்கெடும்.

(எ-டு)

அல்வழி

மரம் + ஞான்றது

=

மரஞான்றது

மரம் + நீண்டது = மரநீண்டது

மரம் + மாண்டது= மரமாண்டது