உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

59

மகரம் பிறக்குமிடம் :

மேலுதடும் கீழுதடும் தம்மிற் பொருந்த ‘ம' என்னும் எழுத்துப் பிறக்கும்.

மகரத்தின் முன் உயிரும் இடையினமும் புணர்தல் :

மகரத்தின் முன் உயிரும் டை டயினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத் தொகையினும் இறுதி மகரங் கெடும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரம் கெடாது நிற்கும்.

(எ-டு) மரம் + அடி

மரம் + வேர்

=

=

மரவடி மரவேர்

வேற்றுமை

வட்டம் + ஆழி = வட்டவாழி வட்டம் + வடிவம் = வட்ட வடிவம்

பவளம் + வாய்

=

பவளவாய்

பவளம் + இதழ்

பவளவிதழ்

=

மரம் + அரிது = மரமரிது

மரம் + வலிது = மரம்வலிது

வலம் + இடம்

நிலம் + வானம்

=

=

}

}பண்புத

பண்புத் தொகை

உவமைத் தொகை

}எழுவாய்த் தொடர்

வலமிடம் நிலவானம்

உண்ணும் + உணவு

=

=

உம்மைத் தொகை

பெயரெச்சத்

உண்ணுமுணவு

ஆளும் + வளவன் ஆளும்வளவன் தொடர்

உண்டனம் + அடியோம்

உண்டனம் + யாம்

=

=

வினை

உண்டனமடியோம் முற்றுத்

தொடர்

மகரக் குறுக்கம்

உண்டனம்யாம்

=

அரசனுமைச்சனும்) இடைச்

=

புலியும் யானையும்

சொல் தொடர்

அரசனும்+ அமைச்சனும் புலியும் + யானையும்

ளகர லகரம் திரிந்த ணகர னகர மெய்களில் ஒன்றன் முன்னும், வருமொழி முதலில் நின்ற வகரவுயிர் மெய்யின் பின்னும் மகர மெய் தன் அரை மாத்திரையிற் குறுகிக் கால் மாத்திரையாய் ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கமாகும்.

(எ.டு) “மருண்ம்”, “போன்ம்”, “தரும் வளவன்

""