உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம்

4

‘மகன்’ என்னும் சொல்லிற்குச் சிறப்பு வழி :

தாய் என்னும் சொல் மகனது வினையைக் கிளந்து சொல்லுமிடத்து வல்லெழுத்து மிக்கு முடியும்.

(எ.டு) மகன்றாய்க் குலம்

மங்கலம் :

இது தகுதி வழக்கின் வகைகளுள் ஒன்று. மங்கலமல்லாத சொல்லை ஒழித்து மங்கலமான சொல்லாற்கூறுவதற்கு மங்கலம் என்று பெயர்.

(எ.டு) செத்தான்

சுடுகாடு

துஞ்சினான் நன்காடு

மரப் பெயர் முன் வல்லினம் புணர்தல் :

உயிரீற்றுச் சில மரப் பெயர் முன் வல்லினம் வந்தால் இனமெல்லெழுத்து மிகும். இகர, உகர, லகர, வீற்று மரப் பெயர் முன் வல்லினம் வந்தால் அம்முச் சாரியையும், ஐகார வீற்று மரப் பெயர் முன் வல்லினம் வந்தால், நிலை மொழியீற்று ஐகாரங் கெட்டு அம்முச் சாரியையும் தோன்றும்.

(எ-டு) மா+ காய்

=

விள + காய்

மாங்காய்

=

=

விளங்காய்

புளியங்காய்

புன்கங்காய்

புளி + காய்

புன் + காய் ஆல் + காய்

=

=

ஆலங்காய்

இனமெல்லெழுத்து மிகுந்தது

அம்முச் சாரியை தோன்றியது

எலுமிச்சை + காய் = எலுமிச்சங்காய் மாதுளை + காய் மாதுளங்காய்

=

மாத்திரையின் இலக்கணம் :

சாரியை

ஐ கெட்டு அம்முச்

}

தோன்றியது

இயற்கையாக மனிதருக்கு உண்டாகின்ற கண்ணிமைப் பொழுதும் கை நொடிப் பொழுதும் ஒரு மாத்திரை என்னுங் கால வரையறைப் பொழுதாம்.

கை நொடி மாத்திரையை நான்கு கூறாக்கிக் கூறுவர். நொடிக்க நினைத்தல் கால்; விரல் ஊன்றல் அரை; விரல் முறுக்கல் முக்கால்; நொடித்தல் ஒன்று.