உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

61

66

உன்னல் காலே ஊன்றல் அரையே

முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே

என்பது அது.

‘மின்’ என்பதற்குச் சிறப்பு விதி :

மின் என்னும் சொல் முதனிலைத் தொழிற் பெயர் போல யகர மல்லாத மெய்கள் வந்தால் உகரச்சாரியை பொருந்தும்.

(எ.டு) மின் + கடிது = மின்னுக் கடிது

‘மீன்’ என்னும் மொழிக்குச் சிறப்பு விதி :

மீன் என்னும் பெயரின் இறுதியிலுள்ள னகரம் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லெழுத்து வந்தால் றகரத்தோடு விகற்பித்து நிற்கும்.

(எ.டு) மீன் + கண்

=

மீன்கண், மீற்கண்

மீன் + செவி

=

மீன்செவி, மீற்செவி

முதலெழுத்து :

அகரம் முதலிய உயிர் பன்னிரண்டும் ககரம் முதலிய மெய் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளு ம் முதல்

எழுத்துகளாகும்.

66

“உயிரும் மெய்யுமாம் முப்பது முதலே”

முதல் போலியும் இடைப் போலியும் :

அகரமும் ஐகாரமும் சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் சகர, ஞகர, யகரங்களுக்கு முன் தம்முள் வேறுபாடில்லாமல் போலியாக வரும்.

(எ.டு) முதற்போலி

இடைப்போலி

பசல்

=

பைசல்

மஞ்சு

=

மைஞ்சு

மயல்

=

மையல்

=

அரசு அரைசு

இலஞ்சு

=

இலைஞ்சு

அரயர்

=

அரையர்

முடிக்குஞ் சொன் னிற்கு மிடம் :

ஆறாம் வேற்றுமை ஒழிந்த வேற்றுமை யுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்க சொற்கள், அவற்றுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு.

வருஞ்