உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

62

(எ.டு) வந்தான் சாத்தான்

வெட்டினான் மரத்தை

4

வெட்டினான் வாளால்

வேற்றுமையுருபு

கொடுத்தான் புலவர்க்கு

நீங்கினா னூரின்

சென்றான் சாத்தன்கண்

முற்றியலுகரம் :

வா சாத்தா

சாத்தன் போயினான் வினைமுற்று போயினான் வந்து வினையெச்சம்

தனி உகரமும், தனிக்குறிலைச் சார்ந்து வரும் உகரமும், மொழியீற்று வல்லின மெய்களின் மேல் மேல் ஊர்ந்து வரும் உகரமும், மொழியீற்று இடையின மெல்லின மெய்களின் மேல் ஊர்ந்து வரும் உகரமும் முற்றியலுகரங்களாகும். இவ்வுகரம் தனக்குரிய ஒரு மாத்திரையில் குறையாது ஒலிக்கும்.

முற்றும்மை :

இவ்வளவென்று அளவறியப் பட்ட பொருளையும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளையும் முடிக்குஞ் சொல்லோடு கூட்டிச் சொல்லும்போது, அவை முற்றும்மை பெற்று வரும்.

(எ-டு) தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்

முற்றெச்சம் :

ஒளி முன்னிருள் எங்கும் இல்லை

தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுந் தமக்குரிய பயனிலை கொள்ளாது வினையெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளு மிடத்து வினையெச்சப் பொருளையும் பெயரெச்சத்திற் குரிய பயனிலை கொள்ளுமிடத்துப்பெயரெச்சப் பொருளையுந் தரும். (எ.டு) சாத்தான் வில்லினன் வந்தான்.

மூன்று என்பதற்குச் சிறப்பு விதி :

இறுதி யுயிர்மெய் கெட நின்ற மூன்றென்னும் எண்ணினது னகர மெய் கெடுதலும் வருமெய்யாகத் திரிதலும் ஏற்குமிடத்து ஆகும்.