உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மெல்லெழுத்து மிக்கு முடியும் மொழிகள் :

ஆர் என்னுஞ் சொல்லும், வெதிர் என்னுஞ் சொல்லும் சார் என்னுஞ் சொல்லும், பீர் என்னுஞ் சொல்லும் மெல்லெழுத்து மிக்கு முடியும் சொற்களாகும்.

(எ.டு) ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு,

பீர்ங்கோடு (கோடு

கிளை)

மெல்லெழுத்துகள் :

மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துகளும் மென்மையான ஒலியைப் பெற்றுள்ளனவாதலால் மெல்லெழுத்துகள் எனப் பெயர் பெற்றுள்ளன. இவற்றை மெலி, மென்மை, மென்கணம் எனவும் வழங்குவர்.

மென்றொடரின் முன் இருவழியிலும் நாற்கணமும் புணர்தல் :

மென்றொடர்க் குற்றியலுகர மொழிகளுள் சில நிலை மொழிகள் வேற்றுமைப் புணர்ச்சியில் தமக்கு இனமாகிய வன்றொடர்க்குற்றியலுகர மொழிகளாகத்திரியும். பல நிலை மொழிகள் அவ்வாறு வன்றொடர்க் குற்றியலுகர மொழி களாகத் திரியா.

(எ.டு) மருந்து + பை குரங்கு + மனம்

வேற்றுமையில் வன்றொட

மருத்துப்பை குரக்குமனம்

இரும்பு + வலிமை

இருப்புவலிமை

ராயின

கன்று + ஆ

கற்றா

வண்டு + கால்

=

வண்டுக்கால்

பந்து + நலம் = பந்துநலம்

ஞெண்டு + வளை

சங்கு + இனம்

=

=

ஞெண்டுவளை

வேற்றுமையில் வன்றொடர்

சங்கினம்

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் :

ஆகாதன

தனித்தும், மெய்யோடு கூடியும் வரும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் பதினோருமெய்யெழுத்துகளும், குற்றியலுகரமும் ஆகிய இருபத்து நான்கு எழுத்துகளும் மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளாகும்.