உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

4 இளங்குமரனார் தமிழ்வளம்

இயல்பாதலும், பண்புத் தொகை உவமைத்தொகைகளில் மிகுதலும் வேற்றுமையில் வல்லினமாவது மெல்லினமாவது மிகுதலும் விதியாகும்.

(எ.டு)

வேய் + கடிது

=

வேய்கடிது

அல்வழியில் இயல்பாயது.

மெய் + கீர்த்தி = மெய்க்கீர்த்தி வேற்றுமையில் மிக்கது.

நாய் + கால் = நாய்க்கால் வேற்றுமையில் வலி மிக்கது. வேய்க்குழல், வேய்ங்குழல் வேற்றுமையில் இனத்தோடு உறழ்ந்தது.

வேய் + குழல்

=

யரழ என்னும் மூன்று மெய்களின் முன் மயங்கும் எழுத்துகள் :

6

யரழ என்னும் மூன்று மெய்களின் முன்னே க ச த படங் ந ம என்கின்ற எட்டு மெய்களும் உயிர்மெய்யாகி மயங்குதலு மல்லாமல் தாமே மெய்யாய் நின்று இரண்டு ஒற்றாயும் மயங்கும். ரகர ழகர மெய்கள் மொழிக்கு உறுப்பாகத் தனிக் குற்றெழுத்தின் பின்னே மயங்காவாம்.

‘யான்’ என்பதற்குச் சிறப்பு விதி :

யான் என்னும் உயர்திணைப் பெயர் யகரம் கெட்டு ஆகாரம் ஏகாரமாய் 'என்' என்றாயும், அல்வழியில் இயல்பாயும், வேற்றுமைக் கண் யகரம் கெட்டு ஆகாரம் ஏகாரமாவதோடு திரிதலுமாம்.

(எ-டு) யான் + கை

= எனகை

யான் + குறியேன்

=

யான்குறியேன்

யான் + பணி

=

எற்பணி.

ரகரம் பிறக்குமிடம் :

மேல்வாய் நுனியை நாக்கின் நுனியானது தடவ ரகரம் பிறக்கும். ரகர வீற்றின் முன் வல்லினம் புணர்தல் :

ரகர மெய்யின் முன் கசதப க்கள் வரின் அல்வழியில் எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை, வினைத்தொகை ஆகிய வற்றில் இயல்பாதலும், பண்புத்தொகை உவமைத் தொகை களில் மிகுதலும், வேற்றுமையில் மிகுதலும், வல்லினமாவது மெல்லினமாவது மிகுதலும் விதியாகும்.