உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம்

அவ் + யாவை = அவ்யாவை

4

இவ் + யாவை = இவ்யாவை

உவ் + யாவை = உவ்யாவை

வகரவீற்றுச் சுட்டுப் பெயர்க்குச் சிறப்பு விதி :

டையினம் வர இயல்பாயிற்று.

அஃறிணைப் பலவின் பாலாகிய அவ், இவ், உவ் என்னும் வகரமெய்யீற்று மூன்று சுட்டுப் பெயர்கட்கும் உருபுகள் புணரு மிடத்து அற்று என்னும் சாரியை பொருந்தும்.

(எ.டு) அவ் + ஐ = அவற்றை

இவ் + ஐ

=

இவற்றை

=

உவற்றை.

உவ் + ஐ

வட மொழியாக்கம் :

வடமொழியில் உள்ள உயிர் எழுத்துகள் பதினாறனுள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்கின்ற பத்து எழுத்துகளும் வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொது எழுத்துகளாகும். வடமொழி விகாரம் :

வடமொழி தமிழில் வரும் பொழுது ரகரத்தை முதலிலே யுடைய மொழிக்கு அ, இ, உ என்னும் மூன்று குற்றெழுத்துகளில் ஒன்றும், லகரத்தை முதலிலேயுடைய மொழிக்கு இ, உ என்னும் உ எழுத்துகளில் ஒன்றும், யகரத்தை முதலிலேயுடைய மொழிக்கு இகரமும் மொழிக்கு முதலாகிவரும். மேலும் வடமொழியுள் இரண்டெழுத்து இணைந்து ஓரெழுத்தைப் போல் நடக்கும் போது பின்நின்ற யகர, ரகர, லகரங்கட்கு இகரமும் மகர வகரங்கட்கு உகரமும், நகரத்திற்கு அகரமும் முன்னேவரும்.

(எ.டு) ரங்கம்

=

அரங்கம், ராமன்

=

இராமன்

ரோமம்

=

உரோமம், லாபம்

=

இலாபம்,

லோபம்

=

உலோபம்.

காவ்யம்

=

காவியம்

வக்ரம்

=

வக்கிரம்

சுக்லம்

=

சுக்கிலம்

ய ர ல க்கு இகரம்

மவ் வுக்கு உகரம்

பத்மம் = பதுமம்