உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மரபு என்னும் இவ்வேழிலும் மாறுபடாமல் தொடர்ந்து நிற்பது முறையாகும். அவ்வாறு தொடர்ந்து நிற்பன வழா நிலை எனப்படும்.

வழி நூல் :

முனைவன் செய்த முதல் நூல் வழியே அதனை ஒட்டிச் செய்யப்படுவது வழி நூலாகும். முதல் நூல் ஆசிரியன் விரித்துச் செய்ததைத் தொகுத்துக் கூறுதலும், அவன் தொகுத்துக் கூறியவற்றை விரித்துக் கூறுதலும், அவ்விரு வகையினையும் தொகைவிரியாகக் கூறுதலும் பிற மொழி நூலை மொழி பெயர்த்துத் தமிழினாற் செய்தலும் என வழி நூல் நான்கு வகைப்படும்.

‘வள்’ என்பதற்குச் சிறப்பு விதி :

வள் என்னுஞ் சொல் இருவழியும் யகர மல்லாத மெய்கள் வந்தாற் பொதுவிதியான் முடிதலேயன்றித் தொழிற்பெயர் போல உகரச்சாரியையும் பெற்றுப்புணரும்.

(எ.டு) வள்ளுக் கடிது, வள்ளுக் கடுமை. வற்றுச்சாரியையின் திரிபு :

சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகாரவீற்றுச் சொல் முன்னர் வற்றுச்சாரியை தன் வகர மாகிய மெய்கெட அகரம் நிற்கும்.

(எ.டு) அவையற்றை, இவையற்றை, உவையற்றை.

வன்றொடர் முன் அல்வழியில் வன்கணம் புணர்தல் :

வன்றொடர்க் குற்றிய லுகரத்தின் முன் வல்லெழுத்தை முதலாகவுடைய சொல் வருமொழியாய் வருமாயின் மிக்கு முடியும்.

(எ.டு) கொக்குக் கடுமை, கொக்குக்கடிது.

‘வாழிய’ என்பதற்குச் சிறப்பு விதி :

வாழிய என்னும் வியங்கோள் வினைமுற்றின் இறுதியில் உள்ள யகர உயிர்மெய் நீங்கிவருதலும் உண்டு. அவ்வுயிர்மெய் நீங்கி இகர ஈறாய் நின்றாலும் இயல்பாகும்.

(எ-டு)

வாழிய + கொற்றா

=

வாழிகொற்றா

வாழிய + சாத்தா = வாழிசாத்தா