உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

வாய் திறந்தவுடன் பிறக்கும் எழுத்துகள் :

73

அ ஆ ஆகிய இரண்டு எழுத்துகளும் வாய் திறந்த வுடனேயே பிறக்கும்.

விகாரம் (வேறுபாடு) :

மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும் வல்லின மெய்யை மெல்லின மெய்யாக்கலும் குற்றெழுத்தை நெட்டெழுத் தாக்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தைத் தொகுத்தலும் விகாரங்களாகும்.

விகாரப்புணர்ச்சி :

நிலைமொழியேனும்,வருமொழியேனும், இவ்விரு மொழி யேனும் தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று விகாரங் களுள் ஒன்றேயாயினும் பலவற்றையாயினும் பெற்றுப் புணர்வது விகாரப் புணர்ச்சியாகும்.

(எ.டு) பூ + கொடி

=

பூங்கொடி தோன்றல்

அல் + திணை

=

அஃறிணை திரிதல்

நிலம் + வலயம்

=

நிலவலயம் கெடுதல்

ஆறு + பத்து

=

அறுபது

கெடுதல், தோன்றுதல்

பனை + காய்

=

பனங்காய் கெடுதல், தோன்றல்,

திரிதல்.

விருத்த சந்தி :

அ ஆவின் முன் ஏ ஐ வரின் நிலைமொழி இறுதியும் வருமொழி முதலுங்கெட 'ஐ' யொன்று தோன்றுவதும் ஆ ஆவின் முன் ஒ ஒள வரின் நிலைமொழி இறுதியும், வருமொழி முதலுங்கெட ஒள வொன்று தோன்றுவதும் விருத்தசந்தியாகும்.

(எ.டு) லோக + ஏகநாயகன்

சிவ + ஐக்கியம்

=

=

=

லோகைகநாயகன்

சிவைக்கியம்

தரா + ஏகவீரன் தரைகவீரன்

மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்

கலச + ஓதனம் = கலசௌதனம்