உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எகரம் பிறக்குமிடம் :

மேல் வாயை நாவின் ஓரம் தடித்துத் தடவுதலால் ளகரம் பிறக்கும்.

ளகரவீற்றுப் புணர்ச்சி :

ளகரத்தின் முன் வல்லினம் வருமாயின் வேற்றுமையிலும், அல்வழியில் பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும் இறுதி ளகரம் டகரமாகத் திரியும். எழுவாய்த் தொடரிலும் உம்மைத் தொகையிலும் திரியாதியல்பாகும்.

(எ.டு) முள் + குறை = முட்குறை வல்லினம் வர வேற்றுமையில் டகரமாகத் திரிந்தது.

அருள் + செல்வம் = அருட்செல்வம் அல்வழியில் பண்புத் தொகையில் டகரமாகத் திரிந்தது.

வாள் + கண்

=

வாட்கண் வல்லினம் வர அல்வழியில் உவமைத் தொகையில் டகரமாகத் திரிந்தது.

பொருள்+பெரிது=பொருள்பெரிது-எழுவாய்த்தொடர் பொருள்+புகழ்=பொருள்புகழ்-உம்மைத்தொகை

ஆகியவற்றில்

ளகரமெய்

வல்லினம் வர அல்வழியில் எழுவாய்த்தொடர் உம்மைத்தொகை இயல்பாய் நின்றன.

அருள் பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தாகையிலும், வாள் போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையிலும் வருமொழி வினையாய விடத்துத் திரியாவெனக் கொள்க.

ளகரவீற்றுப் புணர்ச்சி :

மொழியிறுதியிலுள்ள ளகர மெய் வல்லினம் வந்தால் வேற்றுமையில் டகர மெய்யாகத் திரியும். அல்வழியில் டகரமாகத் திரிந்தும் திரியாமலும் விகற்பித்தலும் ஆகும். வேற்றுமை அல்வழி இரண்டிலும் மெல்லினம் வந்தால் ணகர மெய்யாகத் திரியும். இடையினம்வரின் இயல்பாகும்.

=

(எ.டு) முள் + குறை முட்குறை வேற்றுமையில் வலி வர டகரமாகத் திரிந்தது.