உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாள் + மாண்டது

வாள் + மாண்பு

எழுத்து

வாண்மாண்டது

வாண்மாண்பு

இருவழியிலும்

மெல்லினம் வர

ணகரமாகத் திரிந்தது

முள் + குறிது – முள்குறிது, முட்குறிது முள்குறிது, முட்குறிது – அல்வழியில்

வலி வர உறழ்ந்தது.

முள் + வலிது - முள்வலிது

தோள் + வலிமை

தோள் வலிமை

இட இயல்பாயின

டையினம் வர

77

‘ற’ முன் மயங்கும் எழுத்துகள் :

றகரத்தின் முன் க ச ப என்னும் மூன்று மெய்களும்

இணங்கி மயங்கும்.

(எ.டு)

கற்க, பயிற்சி, கற்பு.

றகரம் பிறக்குமிடம் :

மேல் வாயை நாக்கின் நுனி மிகப் பொருந்தின் ‘ற' என்னும் எழுத்துப் பிறக்கும்.

L

னகரம் பிறக்குமிடம் :

மேல் வாயை நாக்கின் நுனி மிகப் பொருந்தின் ன என்னும் எழுத்துப் பிறக்கும்.

னகரவீற்றுக் குடிப் பெயர்கட்குச் சிறப்பு விதி :

னகரத்தை இறுதியிலுடைய சாதிப் பெயர், வல்லினம் வர ஈறு திரியாமல் இயல்பாதலும், அகரச் சாரியை பெறுதலும் வேற்றுமைப் புணர்ச்சியில் நிகழும்.

(எ.டு) எயின் + குடி

எயினக்குடி

எயின் + சேரி எயினச் சேரி

னகரவீற்றின் கேடு :

தனிக் குற்றெழுத்தைச் சாராத னகரம் வருமிடத்து அல்வழி வேற்றுமை ஆகிய இரு வழியிலும் கெடும்.

(எ-டு) வான் + நன்று வானன்று

செம்பொன் + நன்று செம்பொனன்று

வான் + நன்மை வானன்மை

செம்பொன் + நன்மை செம்பொனன்மை

அல்வழி

வேற்றுமை