உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

தனித்தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்பவர்க்கு இவ்வையம் தோன்றவே தோன்றாது.

அன்பு, அருள், அடக்கம், பொறுமை, இனியவை கூறல், கல்வி, கேள்வி, அரசு, அமைச்சு, தூது, செயலூக்கம், ஒப்பரவு, ஈகை என்பன வெல்லாம் எந்த உலகுக்கு - எந்தக் காலத்திற்கு - வேண்டாப் பொருள்களாகும்?

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திருக்குறளில் பிறப்பு வேற்றுமைக்கு என்ன இடம் உண்டு?

‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்' என்னும் அற நூலில் மாசேற்ற என்ன வழியுண்டு?

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்பதனை வரம்பிடும் குறளில் இல்லாத வாழ்வியல் என்ன இருக்க முடியும்?

விருந்து-இத்தனை வகை - ன்னவகை - என்பதா?

-

உடை - இவ்வகையது - இவ்வண்ணத்து என்பதா? உறைவிடம் - வடிவு இது வனப்பு இது என்பதா?

-

காவல் என்பது கருவி இது, ஆள் எண்ணிக்கை இப்படி ஊர்தி இவ்வகை - என்பதா?

இவற்றின் அடிப்படைகளையே கூறும் குறளின் பொருள் எப்படி மாற்றம் அடையக்கூடும்?

மாறாதவற்றைத்தானே அது கூறவே எடுத்துக் கொண்டு

கூறுகின்றது.

ஒற்றும் தூதும் இத்தகைய என்பதை அன்றி ஆள் உயரம் - அளவு - உடைக் குறிப்புகளையா அது சொல்கின்றது? ஆதலால் காலம் காலமாக ஞாலம் முழுமைக்கும் வழிகாட்டும் உலக ஒப்புரவு நூலாகத் திகழ்கின்றது திருக்குறளாகும்.

இயல்"

இயல்

"திருக்குறளில் சட்ட இயல்”; “திருக்குறளில் சமுதாய

“திருக்குறளில் ஆட்சியியல்”; “திருக்குறளில் பொருளியல்” "திருக்குறளில் அறிவியல்”; “திருக்குறளில் மருத்துவ

"திருக்குறளில் மேலாண்மை இயல்"; "திருக்குறளும் கலைச்சொல்லாக்கமும்"

-