உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

87

“திருக்குறளும் தரக்கட்டுப்பாடும்”; “திருக்குறளும் மனவளக்

கலையும்”

“திருக்குறளும் மனையியற் கல்வியும்”; “திருக்குறளில்

மெய்யியல்

"திருக்குறளில் உயிரியல்”; “திருக்குறளில் பயிரியல்” "திருக்குறளில் ஒழுக்கவியல்"; "திருக்குறளில் பண்

பாட்டியல்

“திருக்குறளில் கலைச் செல்வங்கள்”;

“திருக்குறளில் யாப்பியல்”

·

இன்னவாறு புத்தம் புதுத் துறைகளுக்கும் திருக்குறள் தனித்தனி நூலாகுமாறு செய்திகளைக் கொண்டுள்ளது என்றால் எல்லாப் பொருளும் இதன் பாலுள என்பது எப்படிக் கற்பனையாகும்? அல்லது இட்டுக் கட்டியதாகும்.?

நம் அறிவு வளர்கிறதா? நம் எண்ணம் சிறக்கிறதா? புத்தம் புதுத் துறையில் புகுகிறோமா?

திருக்குறள் அவற்றுக்கெல்லாம் ஈடு தருகின்றது.

நாம் வளர வளர, நம் பார்வை வளர வளரத் திருக்குறள் பயன்பாடும் வளர்கின்றது. திருக்குறளைக் கற்பார் - தேடுவார். நோக்கம் என்ன? அந்நோக்கத்திற்குத் தக அது நுண்ணியற் கருத்துகளை வழங்குகின்றது. இவற்றையெல்லாம் ஆழ்ந்து கண்ட அறிவறிந்த அருமையுள்ளமே, (மதுரைத் தமிழ் நாகனார்) “எல்லாப் பொருளும் இதன்பாலுள்” "இதன்பால், இல்லாத எப்பொருளும் இல்லையால்"

என்று முடிவு செய்ததாம்.

இந்நோக்கில் நீங்கள் ஊன்றிய துறை என்ன? உழைத்து உழைத்து உயரும் துறை என்ன? அதன் நோக்கில் திருக்குறளை நோக்குங்கள்! உங்கள் நோக்குக்கு நூறு நூறு கருத்துகள் திருக்குறளில் வாய்க்கும்!

வைப்பகத் துறை உண்டா?

காப்பகத்துறை உண்டா?