உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

ஒரு பொதுவுடைமைப் பற்றாளர் என்னிடம் உரையாடும் போது, 'நிலவுடைமைச் சமுதாயம் தோன்றித் தந்தையைத் தலைமையாகக் கொண்ட தந்தைவழிச் சமுதாயம் தோன்றிய பின்தான் பெண்கள் வீட்டில் முடங்கினர்; சிற்றின்பப் பொருளா யினர்; மெல்லிய உடல்வாகும் குரலும் பிற பண்புகளும் பெற்றனர். பெண்ணுரிமை மறுக்கப் பெற்றது. பெண்ணடிமைத்தனம் தோன்றியது' என்று வாதிட்டார்.

அப்படிப் பார்த்தால் இன்றும் தாய்க்கோழியின் பின்னால் தான் அதன் குஞ்சுகள் செல்கின்றன; தாய்ப்பன்றி அல்லது நாயின் பின்னால் தான் அவற்றின் குட்டிகள் செல்கின்றன, அதாவது தாய்வழிச் சமுதாய அமைப்புதான் இன்றும் தொடர்கிறது.

நிலவுடைமை அறிவுப் புரட்சி தொழிற்புரட்சி என்று அவற்றுக்கிடையே எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அப்படியிருக்கக் கோழியை விடச், சேவல் ஏன் வலிமையுடனும் கம்பீரத்துடன் போர்க்குணத்துடனும் திரிகிறது? ஆண்சிங்கம் மட்டும் ஏன் பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு முழங்குகிறது? ஆண் யானை ஏன் தன் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றுச் செல்கிறது? ஆண் இனத்திற்கு வலிமை, தலைமை ஏற்கும் மனஎழுச்சி, வாழும் இடத்தில் தன் இறையாண்மையை நிலைப் படுத்தவும் தன்னைச் சார்ந்திருக்கும் இனத்தைப் பாதுகாக்கவும் வேண்டிப் போராடும் போர்க்குணம் ஆகியன இயல்பு.

பெண் இனத்திற்கு மென்மை, இனப்பெருக்க ஈர்ப்பு, உடலால் ஆண் இனத்திடம் அடங்கியும், உணர்வால் ஆண் இனத்தை அடக்கியும் இரு வழிப்பிணைப்பை ஏற்படுத்தும் பண்பு ஆகியவை இயல்பு.

-

பகுத்தறிவால் உயிர்களிடையே முதன்மை பெற்றுவிட்ட மாந்த இனத்தைச் சேர்ந்த நம்முன்னோர், இந்த இயற்கை நியதியைத் தம் அறிவால் உணர்ந்து, அதை நெறிப்படுத்தி, வாழ்வை 'அகம் புறம்' எனப்பிரித்து அகவாழ்விற்குப் பெண்மையைத் தலைமையாகவும் புறவாழ்விற்கு ஆண்மையைத் தலைமையாகவும் கொண்டு சமுதாய அமைப்பை வகுத் துள்ளனர். இதில் உயர்வு தாழ்வு என்ற பேச்சிற்கே இடமில்லை. உடலளவில் பெண்ணிற்கு ஆண் பாதுகாப்பு (புறம்); மனத்தளவில் ஆணிற்குப் பெண் பாதுகாப்பு (அகம்). இயற்கையோடு பொருந்திய இப்பிணைப்பையே இல்லறம் என்ற அமைப்பால் அமைத்தனர்.