உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

101

களவியல் என்னும் காதலில் ஆண்மகனின் ஆற்றல் கரை புரண்ட வெள்ளமாய்ப் பொங்கும்; கற்பியல் என்னும் இல்லறத்தில் பெண்மணியின் முழுதளி (அர்ப்பணி)க்கும் அன்பு, கற்பு எனப்படும் ஒழுக்கமாகிய கரைகளுக்குள் அவனது ஆற்றல் ஒடுங்கி ஒழுங்குபட்டுச் சமுதாயத்திற்குப் பயன்படும். எனவே இல்லறத்தில் ஆண்மகனை நெறிப்படுத்தும் பெரும் பொறுப்பு பெண்களுடையதே.

தம்மை நெறிப்படுத்தத் தவறியவர்களும் தமக்குள்ளே நிறைவுகாண முடியாதவர்களும் எப்படி மற்றவர்களை நெறிப் படுத்தவோ, மற்றவர்க்கு நிறைவுதரவோ முடியும்? எனவே, ஆண்களை நெறிப்படுத்த வேண்டிப் பெண்கள் கைக்கொள்ள வேண்டிய இரண்டு கருவிகளாகிய ஒழுக்கம், முழுதளி (அர்ப்பணி)க்கும் அன்பு ஆகிய இரண்டையும் விளக்க வேண்டி அடுத்தடுத்து இரண்டு குறட்பாக்களைத் தருகிறார் எம்பெருமான். "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்”

இக்குறட்பாவில், முதற்கருவியாகக் கற்பென்னும் ஒழுக்கத்தை அறிமுகம் செய்கிறார்.

முழுதளிக்கும் (அர்ப்பணிக்கும்) அன்பை அடுத்த குறளில் அறிமுகம் செய்யும்போது அவனைத் தன்னுள் நிறைத்து அதன் வழிதான் அவனுள் நிறையும் நுட்பத்தை விளக்க வேண்டி,

தெய்வம் தொழாஅள்; விழிப்பின்போது மட்டுமன்று; தூக்கத்திலும் அவனையே நெஞ்சில் நிறைத்துள்ளதால் அவனைத் 'தொழுது எழுவாள்' என்று வருணித்தார். இதை முற்றளிக்கும், முழுதளி (அர்ப்பணி)க்கும் அன்பு என்கிறோம் நாம். அடிமைத் தனம் என்கின்றனர் இந்த எழுத்தாளர்கள்.

பொதுவாகப் பெண்களில் பத்து விழுக்காட்டினர் தோற்றத்தில் பெண்களாகவும், உடல் மன இயல்புகளில் ஆண்மைக்குரிய தன்மை அதிகம் உள்ளவர்களாகவும் இருப் பதைப் பார்க்கிறோம். அத்தகையோர் தனிப்பட்ட முறையில் தம் உள்ளத்தில் எழும் தன் முனைப்பு எழுச்சியைப் பெண்ணினம் முழுமைக்கும் உரிமையாகக் கருதி, பெண்கள் அனைவரையும் தற்சார்பும் தன்முனைப்பும் உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்னும் கண்ணோட்டத்துடன் இப்படி எழுதியும் பேசியும் திரிகிறார்களோ என்று எண்ணவும் இடமுண்டு.