உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

சங்க காலத்திலும் சரி, திருவள்ளுவர் காலத்திலும் சரி, பெண்ணை வெறும் சடப் பொருள்களைப்போல் விற்பனை செய்யும் (அரிச்சந்திரன் - சந்திரமதி), வழக்கமோ, பணயப் பொருளாய் வைத்துச் சூதாடும் (பாண்டவர் பாஞ்சாலி) வழக்கமோ கிடையாது. அது பழந்தமிழரின் பண்பாடும் அன்று.

ஒரு கற்புடைய பெண்ணிற்கு அநீதி இழைக்கப்பட்டதால் ஒரு நாட்டின் தலைநகரமே தீக்கிரையான காட்சியைத்தான் (சிலப்பதிகாரம்) இலக்கியத்தில் பார்க்கிறோம்.

எனவே, வள்ளுவ மாமுனிவன் போன்ற மெய்யுணர் வாளரின் சிந்தனையைத் தன்னளவில் நெறியும் நிறைவும் இல்லாத நுனிப்புல் எழுத்தாளர்கள், தம் புல்லறிவைக் கொண்டு ஆய்ந்து, பெண்ணடிமைத் தனத்திற்கு உடன்பட்டிருக்கிறார் என்று பிதற்றுவதை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்

-நூல்; கேட்டதும் கிடைத்ததும் பக் : 76 - 80