உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

105

என்னும் குறளில் மக்களால் காணப்படும் என்று கூறாமை அவ்வெளிப்படைச் சான்றாம்.

வள்ளுவர் எச்சம் திருக்குறள் அல்லவா!

வள்ளலார் எச்சம் 'சன்மார்க்க (பொது) நெறி' அல்லவா! இராமகிருட்டிணர் எச்சம் விவேகானந்தர் அல்லரா? விவேகானந்தர் எச்சம் 'விழிமின்! எழுமின்!' அல்லவா! அப்பரடிகள் எச்சம் உழவாரப்பணி அல்லவா! பெரியாழ்வார் எச்சம் ஆண்டாளார் அல்லவா!

தந்தை பெரியார் எச்சம் தன்மானம் அல்லவா!

இப்படி அமைந்த எச்சங்கள் தாமே உலகப் புகழ்ப் பேறாகவும், உலகை உய்விப்பனவாகவும் உள்ளவை.

எச்சத்திற்கு மாறாக ‘மக்கள்' என்று சொல்லப்பட்டிருந் தால் இப்பொருட் பெருக்கம் உண்டா?

இன்னும் வெளிப்படச் சொல்கிறாரே திருவள்ளுவர்.

ஒவ்வொருவரும் கட்டாயம் பெறவேண்டும் எச்சம் 'இசை எச்சம்' என்பதாம். மற்றை எச்சம் அழியினும் அழியா எச்சம் இசையெச்சமே; அவ்விசை எச்சம் பெறார் வாழ்வில் வாய்ப்பது வசை எச்சமே என்னும் வகையால்,

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்'

என்கிறாரே!

ஏனெனில் இசை (புகழ்) தானே, அழியா வாழ்வினது

66

“ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்”

என்று முத்திரை வைக்கிறாரே வள்ளுவர்!

இவற்றால் மக்கட்பேறு இன்மையை விதியாக்கி விளை யாட்டுக் காட்டி வேதனைப்படுத்துவதும் நிரயம் உண்டென நெக்கு விடச் செய்வதும் வள்ளுவ வழியான்றாம்!

ஆகலின், வாழ்வியல் வள்ளுவம் உயர்வற உயர்ந்த உயர்வுநெறி காட்டுதற்கே அமைந்த ஒளிநூலாகும்! அதனை ஓதி அதன்படி வாழ்வார் உய்வார்! ஒளியுறுவார்!