உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திருக்குறளின் முதல் உரையாசிரியர்

66

"திருக்குறளுக்கு முதல் உரையாசிரியர் எவர்?” எனின் முன்னெல்லாம் ‘மணக்குடவர்' என்னும் பெயரே கூறுவது வழக்கம். ஆனால், இக்கட்டுரை திருக்குறளுக்கு முதல் உரை கண்டாரும் முதன்மை உரை கண்டாரும் திருவள்ளுவரே என்பதை நிறுவுவதாகும்.

நூலாசிரியரே உரை கூறியுள்ளாரா? அப்படிக் கூறியிருந் தால் அவர் உரையே முதல் உரையும் முதன்மையுரையும் ஆகும் என்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை எவரும் ஒப்பியே யாக வேண்டும்.

அவர் நூலுக்கு அவரே உரை எழுதின், கால முதன்மை அவர்க்குத் தானே! அவர் நூலுக்கு அவரே உரை எழுதின், அவர் கருதிய கருத்தின் முத்திரை உரை அதுவாகத்தானே இருக்கும்!

திருக்குறளில்

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்

(1062)

என்பதொரு குறள் வந்து, உரையாசிரியர்களிடம் படாப்பாடு படுகின்றதே! "உலகியற்றியானாகிய கடவுள் கெடுக" என்று தானே முன்னையோர் உரைவிரித்தனர். பின்னையோர் "ஆட்சி புரிவோன் கெடுக” என்று உரை கண்டனரே! இவ்வழக்காடு மன்றத்தில் வரிசை தப்பாமல் முறை கூறி முடித்து வைக்கிறாரே வள்ளுவர்! எப்படி?

1. கடவுள் வாழ்த்தில் 'உலகியற்றியான்' என்னும் பெயர் இடம் பெறவில்லை.

2. கடவுள் வாழ்த்தில் இப்பாடலும் இடம் பெறவில்லை. இடம் பெற்றது இரவச்சத்திலேயாம்.

3. இயற்றுதல் என்பது விதிஇயற்றுதல், சட்டம் இயற்று தல், என வருமேயன்றி, உலகு இயற்றுதல் எனவராது, உலகு ஆக்கல், உலகு படைத்தல் என்றே வரும்.