உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

107

4. திருவள்ளுவர், இயற்றும் கடமையை அரசின் கடமை யாகக் கூறியுள்ளாரே அன்றி இறையின் கடமையாகக் கூறினார் அல்லர், அது "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” (386) என்பது. இப்பாடல், இறைமாட்சியில் உள்ளது. இறை மாட்சியாவது அரசியற் சிறப்பு. இனி இப்பாடல்,

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”

371

என்ற குறளில் வரும் வகுத்தானும் ஆட்சியாளனே என்பதையும் தெளிவிக்கும். ஏனெனில், “வகுத்தலும் வல்லது அரசு” என்றார் அல்லரோ?

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை

""

என்னும் வாழ்க்கைத் துணை நலக் குறள், உரையாலும் காலக் கருத்தாலும் பால் நிலையாலும் கெட்டி மேளத்திலும் கொட்டுப்பட்டு வருதல் கண்கூடு.

66

'கணவனை வழிபடும் பெண், பெய் என்ற அளவில் மழை பெய்யுமா? அவ்வாறு பெய்யவில்லை என்றால், அவள் கற்பு இல்லாதவளா?” என்றவாறும், பிறவாறும் குத்திக் குத்திக் கிழித்தாரும், கிழிப்பாரும் பலப்பலர்.

66

'கணவனை வழிபடும் பெண், பெய் என்ற அளவில் பெய்யும் மழை போன்றவள்" என்று புத்தரை கண்டு பொருத்தம் காட்டினார் பலர்.

இதனை ஒவ்வாத பலர், "வள்ளுவத்தைக் காக்கச் சப்பைக் கட்டுக் கட்டுவது இது" என்று பழித்தனர்! “புரட்சிப் பார்வை” என்றும் ஒதுக்கினர்.

அவர் வள்ளுவரைக் கேட்டிருந்தால், அவர்

வாழ்வார்க்கு வானம் பயந்தாற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி

992

என்று "பேரன்புடைய தலைவிக்குப் பேரன்புடைய தலைவன் வாய்த்துக் குடும்பம் நடத்துவது பெய்யென்றும் பெய்யும் மழை போன்றதாம்" என்று கூறுவது - உவமை என்பதைத் தெளிவாக்கிப் பின்னவர் உரையே பொருந்தும் என நிலைநாட்டியும் இருக்கும்.