உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40 ஓ

இனி "வாழ்வார் எவர்? என்பார்க்குப் 'பொருள் இது' என வள்ளுவர் கூறுவதை அறிய வேண்டுமா? “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" (1033) என உழவரையே வாழ்வார் என்று காட்டுதல் தெளிவாகி விடுகின்றது அல்லவா!

மண்ணில் போட்ட வித்து, விளைய வேண்டுமே என்று விண்ணை நோக்கி நோக்கி நிற்பவர் அவர்தாமே! அதிலும் ஏரியும் ஆறும் கேணியும் கிணறும் இல்லாமல் வானம் பார்த்த நிலத்திற்கு உரியவர் என்றால் சொல்ல வேண்டுவது இல்லையே!

'தொழுது எழுவாள்' என்பது 'கோணல்' இல்லையா? 'எழுந்து தொழுவாள்' என்றல்லவோ இருக்க வேண்டும் என்று 'நேர்நடை' காட்டப் புகுவார் உளர். அவரை நோக்கித் திருவள்ளுவர்,

"துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து’

""

என்னும் என் விளக்கக் குறளைக் கற்றதில்லையோ என்கிறார்.

1218

விழிக்கும்போதே விரைந்து நெஞ்சத்தில் இருப்பாரை நெஞ்சில் உறைஞரை -நினைவால் வழிபடற்கு எழும்புதலும் வேண்டுமோ?

'கொழுநற் றொழுதல்' என்பது கணவனை நினைத்தலுமா; வணங்கலுமாம்! அவன், அவளை வணங்கலால் அவளுக்கு அவன் அடிமையா? அவள், அவனை வணங்கலால் அவனுக்கு அவள் அடிமையா? அன்பும் இன்பும் இரண்டறக் கலக்கும் கூடலும், கூடலை மிகுக்கும் ஊடலும் உயர்வு தாழ்வு அறியா ஈருடல் ஓருயிர் நிலையவாம் என்பதை உணர்வார் இவ்வாறு வினவார். ‘பணிமொழி' தானே அவள் ஊடல் உறுதியை அழிக்கின்றது (1258) "யாம் இரப்ப நீடுக மன்னோ இரா என்றல்லவோ அவன் மன்றாடிக் கிடக்கிறான் (1329)! இங்கெல்லாம் அவன் பணிதல் புலப்படவில்லையா?

“உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும்”

""

850

என்னும் குறளுக்கு எவ்வளவோ உரைச்சிக்கல் உண்டே! உலகத் தார் உண்டு என்னும் இறையை, வினையை, பிறப்பை இல்லை என்பார் எவரெவரோ அவரையெல்லாம்‘அலகை'யாக வைக் கப்படும் என்கிறாரே!இது கண்மூடிப்பார்வை இல்லையா?'