உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. "திருக்குறட்படி படி

99

19992,20992 ஆகிய இரு நாள்களிலும் திருமறைக் காட்டில் (வேதாரண்யத்தில்) திருக்குறள் மாநாடு நடைபெற்றது. சீரிய வகையில் "வள்ளுவர் அடிமை” அவர்கள் அவ்விழாவை எடுத்திருந்தார். அவ்விழா மேடைத் தொங்கலில் “திருக்குறள் படி” என்றிருந்தது.

(மேடை ஏறிய யான்) திருக்குறள் நிறைநூல்; தெய்வப் புலமையர் அருளியநூல்; எல்லாப் பொருளும் உள்ள நூல் என்று முழுதுறு நம்பிக்கையுடன் கற்ற நாளில் “திருக்குறள் படி என்னும் ஏவல் போதுமானது! ஆனால் அத்திருக்குறளில் கறையுண்டு, குறையுண்டு, நீக்க வேண்டியவை உண்டு என்று, முழுதுறக் கல்லாமலும் முறையுற நில்லாமலும் குறைகூறுவதே நிறை எனக்கொண்டு நுனிப்புல் மேய்வார் தம்பட்டப் பறை முழக்கும் இக்காலநிலையில், “திருக்குறட்படி” என்றே நாம் முழக்கவேண்டியவர்களாக உள்ளோம்” என்றேன்.

தாசுமாலின் எழிலைக் கண்டு கண்டு களித்தான் ஒருவன்; இதன் ஒரு கல்லைப் பெயர்த்து, பெயர்த்த தடம் தெரியா வகையில் மற்றொரு கல்லைப் பொருத்த இயலாது என்று தேர்ந்தான். பின்னர், அப்படி ஒரு கால் பெயர்த்த கல் தெரியாத வாறு திறமையாளன் ஒருவன் பொருத்தினாலும் பொருத்தி விடலாம்; ஆனால் திருக்குறளில் இருந்து ஒரு சொல்லைப் பெயர்த்துவிட்டுப் பெயர்த்த இடம் தெரியாவகையில் பிறி தொரு சொல்லைப் பொருத்திவிட முடியாது என்றான். ஆனால் அதே திருக்குறளில் அதிகாரம் அதிகாரமாக, பாடல் பாடலாக ஒதுக்க (ஒழிக்க) வேண்டும் என்னும் ஆராய்ச்சியாளரும் (1) இந்நாளில் கிளர்ந்துள்ளனரே!

திருக்குறளைப் பள்ளிதோறும் மாணவர் பயிலுதற்கு முதன் முதலாகத் திட்டஞ் செய்த ஒரு பெருந்தகை அவினாசி லிங்கனார்! ஆனால் அவர்க்கு இன்பத்துப்பால், திருக்குறளில்

டம் பெற்றமை நிறைவு தரவில்லை! திருக்குறள் நாட்குறிப்புப் பெற்று அதனை நாள் வழிக்குறிப்புக்கும் பயன்படுத்தினார்.