உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

111

அந்நாட்குறிப்பை 1932 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை மணிவிழா அதற்கெனக் கொண்டாடும் வகையில் வெளியிட்டு வருவது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமாகும். அந்நாட் குறப்பில் இன்பத்துப்பால் இட டம் பெற்ற ஆண்டில் அவினாசியார் வாங்குவதும் இல்லை; பயன்படுத்துவதும் இல்லை என்பதை மேனாள் கழக ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் கூறினர்.

‘திருக்குறள் படி' என்றவரே திருக்குறட்படி படிக்கக் கருதிக் கொள்ளவில்லை அல்லவா! தந்தை பெரியார் செய்த பேராய (காங்கிரசு)த் தொண்டுக்கு ஈடு இணை இல்லை என்பதை நாடறியும், கைந்நூலாடை (கதராடை)யைத் தோளில் சுமந்து விற்ற அத்தோன்றல் திருக்குறளை நெஞ்சத்துச் சுமந்தும் தலைமேல் தாங்கியும் ஆற்றிய தொண்டுக்கு நிகர் உண்டோ?

அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே எத்தனை திருக்குறள் மாநாட நடத்தினார். எத்தனை நகர்ப்புற நாட்டுப்புறங்களில் திருக்குறள் எண்கவனக - பதின்கவனக நிகழ்ச்சிகள் நடைபெறச் செய்தார்?

நாடெல்லாம் நாளெல்லாம் 'திருக்குறள் படி' என்ற அப்பெருந்தகை கூறிய ஒரு கருத்தை, “பெண்களே தெய்வம் தொழாள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்று சொல்லப்பட்டிருக்கும் நீதியைப் பார்த்தீர்களா? நீங்கள் இப்போது 'பெய்' என்று சொன்னவுடன் மழை பெய்ய வில்லை. இதனால் நீங்கள் எல்லோரும் கற்புடையவர்கள் அல்ல என்றா பொருள்? என்று பெண்களை விழிப்புணர்வுக்குத் தூண்டினார்." என்று தம் ஓரப்பார்வைக்கு அப்பெரியாரையும் சார்பாக்கிக் கொண்டு உரைத்தார் இராசம் கிருட்ணன் என்பார் (தினமணி - ஒரு கோரிக்கை 30.8.92).

திருக்குறட்படி படித்தால் இக்குறளில் பெண்ணடிமைக்கு டமே இல்லை என்பது வெளிப்படும். “வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி” என்னும் குறள் போல் உவமை நடையது இக்குறள் (1192). தெய்வம் என்பார் பற்றற்ற துறவர்; இல்வாழ்வார் யாதனின் யாதனின் நீங்கியான் வழியராதல் ஆகாமல் (331) கொழுநன் வழியராக இயலலே அறனெனப்பட்ட இல்வாழ்வாம். இவை குறட்பா தெளிவாக்கும் பொருள். குறட்படி உரை காணாக் குற்றத்திற்குக் குறளா பொறுப்பு? அதனால் பேரரறிஞர் அண்ணா குறட்படி உரை