உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

காணத் தமிழறிஞர்கள் அன்றே வேண்டினார் என்பது கருதத் தக்கது.

“பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய்நூலாமோ - பாரில் பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி”

என்பதோரு வெண்பா பரிமேலழகன் உரைச் சிறப்புரைக்கும்.

அவர் திருக்குறட் படி உரைகண்டிருப்பின், முப்பாலுக்கு உரைப்பாயிரம் கூறுகையில், "இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் நெறி அறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப் பட்ட பொருள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன” என்றோ,

"அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்" என்றோ,

(ஒழுக்கம்தான்)

“வருணந்தோறும்

மையின்” என்றோ எழுதியிரார்.

வேறுபாடுடை

ஐந்துவித்தான் ஆற்றலைக் கூறுமிடத்து (25), "தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல்.உணர்த் தினான் ஆகலின் இந்திரனே சாலும் கரி என்றார்” என்று எழுதியிரார்.

அறுபதாம் பாடலில், மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன், நன்கலம் “நன்மக்கட் பேறு” என்றும்,

அறுபத்தொன்றாம் பாடலில், பெறுமவற்றுள் யாமறி வதில்லை அறிவறிந்த "மக்கட்பேறல்ல பிற" என்றும் வள்ளுவ அமைதி இருக்கக் கண்டும், மக்கட்பேறு என்னும் அதிகாரத் தலைப்பைப் “புதல்வரைப் பெறுதல்” என மாற்றியமைத்திரார். “மக்கள் என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது” என்றும்

(61)

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”

என்பதன் விளக்கவுரையில் (69) பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்டதாய் எனவும் கூறினார்" என்றெழுத, நடுக்கமின்றி எழுத்தாணியைப் பிடித்திரார். இன்னும்