உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

113

இத்தகையன பலவாம். திருக்குறட்படி உரை எழுதினால், “பக்த சனங்களிட்ட புஷ்பத்தின்மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை மனசிலே பற்றவைத்தார் பூமியின்கண் கசல பாக்கியமும் அநுபவிப்பார்." (3) என்றும், கோளாகிய நவக்கிரகங்களும் (9) என்றும்,

"ஒருவராலும் செயற்கரிய துறவறத்தைச் செய்வார் பெரியர்; சிறியவர் செய்யும் தொழிலாகிய இல்லறமும் செய்ய அறியார் (26) என்றும், ஸ்திரி சாதி என்றும், பெரும்பாவக் கன்னியராயினும் பெண்பிறப்பு தெய்வப்பிறப்பு. அது எது எனில் பெண்ணிடத்தில் பதிவிரதா பாவகம் உண்டாகில்” (54) என்றும்,

"செல்வத்துள் இல்லின் தன்மையானது விருந்து ஓம்பல்; அங்ஙனம் ஓம்பாத மடமை சில பெண்களிடம் உண்டு. ஸ்திரியும் புருஷனும் ஒருமனமாகச் செய்வது விருந்து; அல்லது” (89) என்றும், இப்படியெல்லாம் பரிதியார் உரை எழுதுவாரா?

‘வாழ்க்கைக் துணைநலம்' எனப் பெயர் இருந்தும், இல் வாழ்க்கை முதல் இரண்டு பாடல்களிலும் "இல்வாழ்வான் என்பான் துணை" என்றிருந்தும், 1234 ஆம் பாடலில் தலைவி தன் தலைவனைத் துணை எனக் குறித்திருந்தும், 'பெரியாரைத் தணைக்கோடல்’ இடிக்குந் துணையார் (447) எனைத்துணையர் ஆயினும் (144) என்பன போல வழக்கிருந்தும், வாழ்க்கைத் துணைவி நலம் என்றோ, வாழ்க்கைத் துணைவன் நலம் என்றோ பாற் பகுப்புக் காட்டால் பொதுமைகாட்டி ஒருவர்க்கு ஒருவர் துணை என்று காட்டியிருந்தும் 'வாழ்க்கைத் துணை' என்பதால் பெண்ணைத் தாழ்த்திவிட்டார் என்பார். திருக் குறட்படி படியாமல் அறிவையும், ஆய்வையும், நேர்மையையும் தாழ்த்திக் கொண்டாரே அன்றிப் பெண்மையை வள்ளுவர் தாழ்த்திய சான்று இல்லையாம்!

"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்

""

(1062)

என்னும் குறளில் வரும் உலகியற்றியானை "இவ்வுலகத்தைப் படைத்தவன்” “இவ்வுலகினைப் படைத்தோன் "இவ்வாறாகக் கற்பித்த முதல்வன்" "பிரமன்" எனப் பழைய உரையாசிரியர்கள் பலரும் உரைத்தமை திருக்குறட்படி உரைத்ததாகுமா?

இறைவனுக்குரிய பெயர்களுள் ஒன்றா “உலகியற்றி யான்?” ‘படைத்தல்' ‘உளதாக்கல்' என்பவற்றை இயற்றுதலாகச்