உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

125

நேற்றுப் பிறந்தது இராமகிருட்டிண ராமகிருட்டிண விவேகானந்த அமைப்புகள்! ஆனால் ஈராயிர ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றியது கிறித்தவம்.

கிறித்துவின் கருத்தைப் பரப்புநர் ஆக வாய்த்தவர் பன்னிருவர். உறுதிப்பிடியானவர் பதினொருவர். ஒருவன் முரண்பட்டாலும் இறுதியில் தன் முரண்பாட்டை உணர்ந்து தன் மனக்கே முடிவு தேடிக் கொண்டான்.

அதுவே கிறித்துவின் முதல் வெற்றி! கிருத்துவத்தின் முதல் வெற்றி. மனச்சான்றால் தானே ஒருவன் மாண்டான் என்பதனினும் அறத்தின் வெற்றி வேறொன்று இருக்க முடியாது! அவன் காட்டிக் கொடுத்தலால் வாய்த்த சிலுவை தான் கிறித்துவைத் தெய்வப் பிறப்புக்கு உயர்த்திற்று! புகழ் தந்து, பழிகொண்டவன் யூதாசு! அவன்தான் கிறித்துவாகிய ஒருவர் உரையைப் பரப்பிய முதற் பரப்பாளி. இன்று எத்தனை கோடி மக்கள் கிறித்தவர்! கிறித்தவம் இல்லாத மண்பரப்பு ஒன்று உண்டா? நம்பமுடியும் வளர்ச்சியா இது!

எத்தனை மொழிகள் உண்டோ அத்தனை மொழிகளிலும் கிறித்துமொழி உண்டு! சிற்றூர், பேரூர், சிறுநகர் பெருநகர், சிறுநாடு பெருநாடு என்னும் வேற்றுமை இல்லாமல் கிறித்தவக் கோயில் உண்டு! மருத்துவமனை உண்டு! கல்விநிலையம் உண்டு! முதியோர் இல்லம் இளையர் கழகம் இன்னவெல்லாம் தொடர் தொடராக உண்டு! கிறித்துவின் பெயரோ துண்டறிக்கையோ நம் காதில் விழாத, கண்ணில் படாத நாள் ஒன்று உண்டோ?

வை எல்லாம் என்ன கூறுகின்றன! பொருள் நல்ல பொருள் என்றாலும் போதாது. நல்ல பொருள் என நாளும் பொழுதும் விளம்பரப்படுத்தி ஆதல் வேண்டும். விளம்பரம் அறிந்து தேடிவருவார்க்கு வேண்டும் வகையால் வேண்டும் அளவில் அப்பொருள் வழங்குதல் வேண்டும். "உள்ளே வரட்டும்; பின்னே உள்பொருள் ஆனால் போதும்! “என்னும் உவப்பான வரவேற்பு ஊரையும் உலகையும் திரட்டிற்று!

-

-

ஊண்கட்டு இல்லை; உடைக்கட்டு இல்லை; வாழ்வியல் உரிமையிலும் தலையீடு இல்லை; தவறென உணர்ந்தால் இறையிடம் குருவிடம் மண்டியிட்டு உரைத்தால் கழுவாய் உண்டு! அத்தவறு எத்தனை முறை எனினும் கழுவாய் உண்டு. இவ்வளவு சலுகைகள் இருப்பதால் - நம்பிக்கைகள் ஊட்டு வதால் சமயம் முன்னேற்ற வாழ்வுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிடுவதால் - அதன் பக்கம் சார்கின்றனர்.