உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம்

-

-

40 ஓ

சார்வது எதனால் சாரத்தக்க, சொல்வாய்ப்பு - உதவி வாய்ப்பு! அந்நிலை பல்லாயிரம் பேர்கள் பல்லாயிரம் ஆண்டு தொடர்ந்து வருவதென் வெளிப்பாடே இற்றைக் கிறித்தவ சமய வெளிப்பாடுகள் - நிறுவனங்கள் - நிலையங்கள்!

போற்றுவாரை எண்ணும் வேளையில் தூற்றினாரே துயர் ஊட்டினாரை அவற்றையும் சமயத்திற்கென ஏற்றுப் போற்றினாரை அவர் செய்த ஈக உரத்தை எண்ணாமல் முடியுமா?

கிறித்தவத்தின் பின்னணிப் புரவாண்மைப் புலம் அரசு ஆட்சி! ஒரு கிறித்தவ நிலையம் பள்ளி கட்டுகிறது; அதற்கு இடம் ஒரு மலைப் பகுதி; ஆம்! ஒரு மலைப்பரப்பு பள்ளிக்கு அரசால் உதவப்படுகிறது! அப்படி ஒரு மலையா? ஒரு காடா? ஒரு கடற்கரையா? ஒரு வயற்பகுதியா? ஊட்டிவளர்த்தது அரசு! உரமாக வளர்ந்தது சமயம்! நேற்றுத் தோன்றிய பாகித்தான் இசுலாமியக் குடியரசு! அரசே சமயக் காவலாண்மைப் பொறுப்புக் கடன் கொண்டது. வேலைவாய்ப்பா -தொழில் தொடங்கும் உரிமையா எல்லாம் சமயம் ஆகிவிடின் அச்சமயத்தைச் சாராமல் எவர் இருப்பார்? சாராதார் பாடு என்ன?

திருக்குறள், தோன்றி நாள் தொட்டு, தமிழ் மூவேந்தர் காலம் தொட்டு அரசு போற்றி - அரசின் ஆட்சி நூலாக இருந்தது இல்லை. பல்வேறு குலப்பிரிவுக்கும் - கயமைகளுக்கும் கொடுமைகளுக்கும் வைப்பகமாக உள்ள ‘மனுநூல்' ஆள்வோர் போற்றிய நூலாயிற்று. மனுநீதிப்படி ஆட்சி நடத்தியதாக வரலாறு எழுந்தது. ஆனால், நம்மறை அல்லது எம்மறை திருக்குறள் என அரசு முடிவு செய்ததுண்டா? நாணத்தக்க நூலை மறையெனக் கூற நாணாத அரசுகள் இருந்ததை எண்ணினால், திருக்குறள் நம்மறை என்று கூறுவதனை ஓர் அரசு தன் பெறலரும் பேறாக அல்லவோ கொண்டிருக்க வேண்டும்! அந்நிலை ஏற்படுவதும், ஏற்படுத்துவதும் இந்நாளில் தீராக்கடமை அல்லவோ!

நடைபெறும் அரசு முடியரசன்று; வல்லாண்மை அரசும் அன்று; தவறுகள் உண்டு. எனினும் குடியரசே! குடியரசில் ஒன்று ஏற்கப்பட வேண்டுமானால் குடிகள் அன்றே அதனைத் தம் கொள்கையாக எடுத்துரைத்து - வற்புறுத்துரைத்து - போராடி நிலைப்படுத்த வேண்டும்! எண்ணிக்கையால் அரசேற்றவர்க்கு, எண்ணிக்கையால் ஆணையிடின் கட்டாயம் செய்து தானே ஆகவேண்டும். அந்நிலை உருவாக்குதல் எவர் பொறுப்பு. இந்நலம் வேண்டும் என்பவர் அல்லரோ உருவாக்குதல் வேண்டும்.