உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

"பசியில் லாகுக பிணிசேண் நீங்குக"

“அறம் நனி சிறக்க அல்லது கெடுக”

66

'அரசு முறை செய்க களவில் லாகுக'

“நன்று பெரிது சிறக்க தீதில் லாகுக'

“மாரி வாய்க்க வளநனி சிறக்க”

இன்னவாறு வாழ்த்துகள் இடம் பெற்றுள.

227

புறநானூற்றில் கடவுள் வாழ்த்தை அடுத்த முதற் பாட்டே, "பொற்கோட் டிமயமும் பொதியமும்" போன்று வாழ்க

என்று வாழ்த்துகின்றது.

"தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்

ஒண்கதிர் ஞாயிறு போலவும்

மன்னிய பெருமநீ நிலமிசை யானே"

என வாழ்த்துவது ஆறாம் பாட்டு.

"வாழ்வோர் வாழ அவன்தாள் வாழியவே"

என்னும் வாழ்த்து (171) ஒப்புரவாளன் வாழ, உலகம் வாழும் என்னும் உயர் கருத்தை விளக்குவது.

காக்கும் தலைவனையும் அவன் கருவியையும் நாடாள் வேந்தனையும் வாழ்த்துவதொடு, மாறுபட்ட பகையையும், வாழ்த்துவது 172 ஆம் புறப்பாட்டு.

66

“வன்புல நாடன் வயமான் பிட்டன்

ஆரமர் கடக்கும் வேலும், அவன் இறை

மாவள் ளீகைக் கோதையும்,

மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே"

என்பது அது.

தன் வாழ்வையும் எடுத்துக் கொண்டு நல்லோன் வாழ வாழ்த்தும் அருமையுடையது.

“யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய”

என்னும் புறப்பாட்டு (173)