உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

வருந்தும் நிலை உண்டாயினும் வாயாற் பழியார்

என்பதை,

“உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்

புலவேன் வாழியர்”

என்பது (204) விளக்கும்.

இச்சங்கச் சால்பு காக்கப்பட வேண்டும் என்பது வள்ளுவ நெறி. முதல் அதிகாரத்திலேயே திருவள்ளுவர்,

"நிலமிசை நீடுவாழ் வார்” என்றும்,

"நெறிநின்றார் நீடுவாழ்வார்"

என்றும் வாழ்த்தினார். வாழ்க என்று அமையாமல், “நீடு வாழ்க" என்னும் நெஞ்ச நிறை வாழ்த்தாக ஈரிடங்களிலும் அமைந்தன.

தும்மல் குறிப்பின்றி (அனிச்சையாய்)த் தோன்றும் தன்மையது. குழந்தையர்க்கு அது தோன்றி ஒலி வெளிப்பட்ட அளவில் அன்னையர், 'நூறு' என்று வாழ்த்துவது இன்றும் கண்டு கேட்பன. அக்குழந்தை இரண்டாம் முறை தொடுத்துத் தும்மினால் 200 என்று சொல்வதும் நடைமுறையாய் உள்ளனவே.

தும்மல் போலும் சிறு துயராலும் வாழ்நாள் குன்றுதல் ஆகாது என்று தேர்ந்த பேருள்ள நோக்கே இப்படி வாழ்த்து முறை கண்டதாம். இதனைக் காமத்துப்பாலில் காத்து மொழி கின்றார் வள்ளுவர்:

66

“ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து"

என்பது அது.

(1312)

ஊடலைத் தீர்க்கும் உயர் மருந்தாகத் தும்மல் இருப்பதைக் காட்டும் வள்ளுவர், நம் முந்தையர் பண்பாட்டைக் காட்டு வதுடன் 'நீடுவாழ்க' என்னும் நெறியையும் விடாமல் பேணுகிறார்.

தும்மல் குறிப்பின்றித் தோன்றுவது போல, வாழ்த்து தலும் குறிப்பின்றி வந்து விடும் இயல்பினது என்பதை,

“வழுத்தினாள் தும்மினேன் ஆக

என்பதனால் காட்டுகிறார். (1317)

""