உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

ஆக்கம் கேடு என்பவை முரண்கள்

ஆக்கம் அழிவு என்பவும் முரண்களே.

ஆக்கம் அரிதில் வாய்ப்பது.

கேடு எளிதில் தேய்ப்பது.

229

ஆக்கம் வாய்த்தால் மேலும் மேலும் ஆக்கப்படுத்தி நெடிது ஆக்கம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனால், மதிப்பு மிக்க செல்வத்தை ‘நெடுஞ்செல்வம்' என்பார் (566) திருவள்ளுவர்.

"ஆள்வேன் காட்சிக்கு எளியனாக இருத்தல் வேண்டும்; கடுஞ்சொல் சொல்லாதவனாக இருக்க வேண்டும்." என்பது ஆட்சி அடிப்படை வள்ளுவம். (386)

அவ்வாள்வோன் கண்டிக்கவும் தண்டிக்கவும் ஆம் சூழல் ஏற்படக் கூடும். அப்படி ஏற்படினும் கடுமையாகக் கண்டிப்பவன் போலவும், தண்டிப்பவன் போலவும் காட்டிக் கொள்ளலாம். ஆனால், கண்டிப்பு, தண்டிப்புகளின் ஊடகமாகக் கனிவும் மென்மையும் இருத்தல் வேண்டும். அவ்வாறிருத்தலே அவ்வாள் வோனுக்கும் ஆட்சிக்கும் நலம் பயப்பதாம் என்பார். இதனை,

“கடிதோச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம் தீங்காமை வேண்டு பவர்”

என்பார். இங்கும் நெடிதாக்கம் என்றது காண்க.

(562)

வாய்த்த ஆக்கத்தை வாழ்வாரும் ஆள்வாரும் நெடிது காத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஆக்கங்களுக்கெல்லாம் அடிமூலமான ஆக்கமாம் உடலாக்கத்தை, உயிரினும் உயிராகப் போற்றிக் கொள்ள வேண்டும் அல்லவோ! அக்கடமையைத் தவறினார்க்கு ஆயிரவர் ஆயிர வகையாய் அள்ளி அள்ளி வாழ்த்தினாலும் ஆவதென்ன? அதனால், ஆக்கத்தில் ஆக்கமாய் வாய்த்த ஆக்கை நலத்தை நெடிதாக்கிக் கொள்ளல் அறிவறிந்த மாந்தப் பிறப்பின் மாறாக் கடமை என்பதை,

“அற்றால் அளவறிந்து உண்க; அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு" என்பார்.

அற்றால் உண்க!

அளவறிந்து உண்க!

உடம்பு பெற்றான் உண்க!

(943)