உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

11

கண்ணால் காணவும் கருதாராய்க் காறி உமிழ அல்லவோ செய்தார்?

வறுமைக்கு வறுமை - இடும்பைக்கு இடும்பை செய்த ஏந்தல் சிதம்பரனார் சுடச்சுடரும் பொன் ஆனார்?

இந்த மண்ணிலேயே இன்னும் எத்துணைப் பேர்கள் சுடச்சுடரும் பொன்னாகத் திகழ்ந்தவர்கள்? உலகெல்லாம் ஒருபார்வை பார்த்தால் எத்தனை வரலாறுகள்?

வெள்ளைமாளிகையில் கால்வைக்கும் நிலையில் இருந்தவரா ஆபிரகாம்லிங்கனார்? இறந்தோரை இட்டுப் புதைக்கும் பெட்டி செய்த தச்சத் மகனார் அவருக்குத் துணையாளாய்ப் பணிசெய்த மகனார் அடுப்பு வெளிச்சத்திலே படித்து மண்வெட்டியிலே கரித்துண்டால் எழுதி மாற்று டையின்றித் தோலாடையுடுத்து, வழக்கறிஞராய் - அரசியல் தலைவராய் விளங்கிய அவரை வறுமை என்ன செய்தது?

-

-

தன் கொடிய பற்களெல்லாம் உதிர்ந்துபட அவர் உதைத்த வெற்றியுதைகளை வாங்கிக் கீழே வீழ்ந்து பட்டதை வரலாறு மெய்ப்பிக்கின்றதே!

இருபத்தைந்து ஆண்டுகள் ஏறத்தாழ 15 ஆயிரம் நூல்களைப் படித்து மூலதனத்தைப் படைத்தாரே காலல்மார்க்கசு!

Back

செல்வத்திலே புரண்ட செழுஞ்செல்வரா அவர்? வெறியாட்சிக்குத் தப்பியோட நேர்ந்ததென்ன வறுமைக் கடிக்கு வயப்பட்டதென்ன - நோயின் வல்லாண்மைக்கு ஆட்பட்ட தென்ன உயிரின் உயிராக வாய்த்த வாழ்க்கைத் துணையும் உயிரின் கான்முளையாம் மக்களும் பட்டபாடுகள் என்ன?

இவையெல்லாம் மார்க்கசாம் பெருமகனை என்ன செய்தன? அலையடித்து அடித்து மோதினும் நிலைகுலையா மலையோல் நிமிர்ந்து நின்று வெற்றி கண்டாரே அவர், ‘சுடச்சுடரும் பொன்' அல்லரோ!

காரல்மார்க்கசின் எழுத்தை உந்துகோளாகக் கொண்டு, கொடி பிடித்து மூரிமுழங்கி எழுந்தாரே இலெனினார்! அவர் பாராத வெறியாட்டங்களா? சூறைகளா? அவையெல்லாம் மண்டியிட்டுக் கிடந்த வெற்றியன்றோ அவர்தம் புரட்சிவெற்றி!

உருசியநாட்டு உழைப்பாளர் ஒவ்வொருவர் மூச்சும், பேச்சும், உணர்வும், உடையும், உறைவும், எல்லாம், எல்லாம்