உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தம் பொருள்

"நம்மைப் பார்த்து,” உங்களுக்குரிய பொருள் யாது? என ஒருவர் வினாவின் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக மறுமொழி கூறுவோம்.

நிலம் புலம், ஆடு மாடு, வீடு மனை, இருப்பு எடுப்பு, தொழில் துறை என ஆளுக்குத் தக்கவாறும், விருப்புக்குத் தக்கவாறும் மறுமொழி வெளிப்படும். ஆனால் வள்ளுவரிடம் ஒருவர் வினாவின் அவர் தரும் மறுமொழி வேறு; அது தனித் தன்மையினது.

“தம்பொருள் என்ப தம் மக்கள்

என்பது அது.

"ஒவ்வொருவருக்கும் அவரவர் பொருள் என்று சொல்லத் தக்கது மக்கள் என்னும் பொருளே" என்கிறார் திருவள்ளுவர். "மக்கட் பொருள் அவ்வளவு அரியதா?" எனத் திகைப்பு ஏற்படலாம்!

வித்தைப் பெருக்குக; விளைவைப் பெருக்குக; உண்டாக் கத்தைப் பெருக்குக; உருவாக்கத்தைப் பெருக்குக; எனத் துறை தோறும் முழக்கமிடும் இந்நாடு, "இரண்டுக்குமேல் எப்போதும் வேண்டா" என்ற நிலையில் சுருங்கி, "ஒன்றே போதும்" என்று உரக்கக் கூவும் மக்கட் பொருள், அத்தகு சிறப்பினதோ என்னும் திகைப்பும் உண்டாகலாம்!

இற்றை நிலை மட்டு மன்று; இன்னும் பெருக்க மிக்க எற்றை நிலையிலும் 'தம் பொருள் என்பதம் மக்கள்' என்பதே வாய்மொழி, என்பது வையக வரலாற்றை நினைத்துப் பார்த்த அளவானே புலப்படும்.

'வெந்ததைத் தின்று விதிவந்தால் போதல்' என்று பிறப் பிலேயே ஒடுங்கிப் போய்விட்ட மக்களையோ, “சோற்றுக்கும் சுவைக்குமே பிறந்த பிறவி" எனச் புவிச் சுமையாக ஆகிவிட்ட மக்களையோ, “கண்டதே காட்சி கொண்டதே கோலம்" எனப்