உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

15

இதற்குத் திருவள்ளுவரையே எடுத்துக்காட்டாகக் கொள்ளலாமே! திருவள்ளுவர் பெற்றோர் பெயர் தாமும் அறியோமே! ஆனால் அவர்கள் பொருளாம் திருவள்ளுவரால், எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இந்த மண்ணுக்குப் பெருமை வாய்த்துப் பெருகி வருகின்றது; இனம், மொழி, நாடு சமயம் எல்லாம் எல்லாம் கடந்து, எத்தனை எத்தனை பேர்க்கு உள்ளொளியாகத் திகழ்கிறார் வள்ளுவப் பெருந்தகை? அவரைப் பெற்றதால் பெற்றோர் பெற்றது பெரிதா? உலகம் பெற்றது பெரிதா?

இப்படி, அறிவாளர், அருளாளர் கலையாளர், சான்றாளர் உலகுக்கு வாய்த்துள்ளோர், ஒருவரா? இருவரா?

'எடிசனார்' என்னும் அறிவறிந்த நன்மகனார் பிறப்பால் இந்த உலகம் அடைந்துள்ள நலப்பாடுகளுக்கு அளவும் உண்டோ? இருநூறுக்கு மேற்பட்ட பொருள்களைக் கண்டு உலகப் பொருளாக வழங்கிய அப்பெருமகனினும் அப்பெற்றோர் பொருள் என ஒன்று சொல்ல உண்டோ? இசைப்பதிவைக் கேட்டால், திரைப்படத்தைக் கண்டால், நீராவியாற்றலை அறிந்தால் அங்கெல்லாம் இருப்பவர் எடிசனார் அல்லரோ!

கண்ணைமூடிக் கண்ணைத் திறப்பதற்குள் எத்தனை எத்தனை வண்ண அச்சுத் தாள்கள் குவிக்கின்றன! அச்சுக் கலைக்கு வித்திட்ட 'கூட்டன்பர்க்கு' என்பாரின் பயன் குடும்பப் பயன் அளவிலோ நின்றமைந்தது!

மிதிவண்டி

-

உந்துவண்டி தொடர்வண்டி முதலாம் மண்ணூர்திகள் மற்றும் விண்ணூர்திகள் நீரூர்திகள் ஆகிய வற்றைக் கண்டுபிடித்த அறிவறிந்த நன்மக்கள் குடும்பத்தவர் மட்டுமோ இன்று பயன் கொள்கின்றனர்? உலகை ஓர் இயக்க மாக்கி வரும் இவ்வியக்கங்களைக் கண்டவர் ஒரு நாட்டாரோ? ஓர் இனத்தாரோ? எவராயின் என்ன அவர்கள் கொடை உலகக் கொடை என்பதில் ஐயுறவு உண்டோ?

விரிப்பானேன்! இற்றை ஒருநாள் மட்டில் நாம் எத்தனை எத்தனை நன்மக்கள் கொடையைப் பயன்படுத்திக் கொண்டுள் ளோம். எண்ணி முடியுமா? ஒருவர் ஆக்கப் படைப்பே, உலக ஆக்கப் படைப்பாகத் திகழ்வன என்பதை உணரும்போது அவ்வாக்கத்தை ஆக்கியவரினும் ஆக்கப் பொருள் ஒன்றைக்கூற முடியுமா?