உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

இந்நாள் உலகம் 'கணிப்பொறி உலகம்' எனப்படுகிறது. இக்கணிப் பொறியின் விந்தைப் பயன்கள் விரிய விரிய விரிவன எனப்படுகிறது! எனினும் என்ன? கணிப்பொறியைக் கண்ட மூலவர் அறிவறிந்த நன்மகனார் ஒருவர்தாமே! அவரினும் அவர் பெற்றோர்க்கமைந்த பொருள் ஒன்று உண்டோ?

று

நொடிப்பொழுதில் உலகைப் பொடியாக்கும் அழிவைத் தந்தவரும் அறிவாளர்தாமே! அவரும் அவரைப் பெற்றோர்க்குப் பொருள்தாமே, எனின் அவர்கள் 'பழிபிறங்கிய பண்பிலா மக்கள்' என வள்ளுவம் எள்ளும்! மக்கள் உருவத்தராகிய அம்மக்களை, மக்களே போல்வர் கயவர், அவர்க்கு ஒப்பார் இல்லை எனச் சுட்டும்!

>

“தம்பொருள் என்பதம் மக்கள்”

என்னும் அரைக் குறளினும் குறுகிய முச்சீர், வாழ்வியலில் எப்படி வளைய வளைய வருகின்றது! எண்ண

விரிகின்றதன்றோ?

எண்ண