உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு, ஓடியதை ஒருவர் ஒருவராகப் பேசி நகர் பேசும்! நாடு பேசும்! ஆனால் ‘இலக்கர்' என்ன ஆவார்? கலக்கர் ஆவார்! நோயர், இவ்வதிர்வுச் செய்தியால் போயே போய்விடுவார். உள்ளது உரியதை யெல்லாம் விற்று முதலிட்டவர்கள் முக்காடுபோட்டுக் கொண்டு முட்டி அழுவர்! ஆனபின் ஆவதென்ன?

"இது வெளி நாட்டுச் சரக்கு! போனால் கிடையாது; என் நெருக்கடியால் விற்கிறேன். யாருக்கோ தருவதை உங்களுக்குத் தரலாமே என நல்லெண்ணத்தால் தருகிறேன். ஒரு மாதங்கூட ஆகவில்லை; புத்தம் புதிது. பாதிவிலை கூட இல்லை; எண்ணிப் பாராமல் எண்ணிக் கொடுங்கள்" என்று நயமாகப் பேசி, ஏமாந்தவர் தலையில் கட்டிவிட்டுப் போயிருப்பார்!

வானொலியோ, தொலைக்காட்சியோ, கடிகாரமோ மிதிவண்டியோ துள்ளுவதோ - ஏதோ இருக்கும். வாங்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, களவு என்றோ, கடத்தல் என்றோ பறிபோகியதுமன்றி மானமும் போகும்!

மலிவான விலையில் ஒருவன் தலையில் கட்டுகிறான் என்றால் எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஆனபின்னே அரற்றியதால் ஆவதென்ன?

செண்டு

"நம்பிக்கையான புள்ளி; பக்கத்தில் ஒரு பன்னீராயிரம். ஒரு நெருக்கடிக்காக விற்கிறான். நாம் தந்ததை வாங்கிக் கொள்வான். அரைவிலை; ஆறாயிரம்; முடித்து வைக்கிறேன். எனக்கு நீங்கள் தருவதை வாங்கிக் கொள்கிறேன்” என்று இனிக்கப்பேசி விலைப்பதிவும் முடிந்து விடும்!

எழுதித் தந்தவனுக்கும் அந்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் இராது. அவன் இடம் தானா? பக்கத்து இடத்தான் எவன்? எவரிடம் வாங்கியது? இவற்றையெல்லாம் கூடத் தெரியாமல் வாங்கினால், தெரியாமல் விற்றுத், தெரியாமல் ஓடிவிடமாட்டானா?

"வேலை வேண்டுமா? உள் நாட்டிலா? வெளிநாட்டிலா? கவலை விடுக; கைம்மேல் வேலை, கையில் கணிசமாகத் தள்ளுக” இப்படி எத்தனை வேலைத் தரகர்!

அவர்க்கு வேலை ஒன்றைப் பிழைக்கும் வேலை ஒன்றைப் பார்த்துக் கொண்டார்! அகப்பட்டவர் நிலை! ஐயோ என்றால் தீருமா? அம்மோ என்றால் முடியுமா?