உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

19

பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, பாத்திரச் சீட்டு, துணிச்சீட்டு, சுற்றுச்சீட்டு, இப்படி எத்தனை சீட்டுகள்!

இன்னும் குலுக்குச் சீட்டு வகைகள் எத்தனை! தூண்டில் புழுவை விரும்பித் துடித்துச் சாகும் மீன் போலச் சூதர் அழிவர் என அறவோர் சொல்லியும், அழிவோர் கேட்டாரோ?

அரசுகளே பரிசுச்சீட்டும் பந்தயமும் நடத்தும் நாளில் சுருட்டர்களைச் சொல்ல வழியுண்டோ?

குறுக்கு வழியிலே - கண்ணைமூடிக் கண்ணைத் திறக்கும் பொழுதுக்குள்ளே - கொழுத்த செல்வர் ஆகவேண்டுமென்று கொள்ளை கொடுத்துக் கொள்ளி முடிந்தவர்களின் எண்ணிக் கைக்கு அளவுண்டா? நாள் தவறினாலும், நான் தாள்களில் இத்தகு செய்திகள் தவறியதுண்டோ?

“ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்?"

என்கிறார்வள்ளுவர். மேல்வரும் ஊதியத்தை எண்ணிப், போட்ட முதலையும் இழக்கக்கூடிய முயற்சியை அறிவுடையோர் மேற்கொள்ளார் என்றார். அறிவுடையோர் மேற்கொள்ளாமலா

உளர்?

இவ்வகையில் ஏமாறுபவர்கள் அனைவரும் கல்வி அறிவிலார் தாமா? கற்றவர்கள், பாடம் பெற்றவர்கள், பதவி யுற்றவர்கள் எத்துணைப் பேர்? வள்ளுவ வாக்கின்படி அறிவுடையார் எனத் தக்கவரா அவர்?

ஒரே ஒரு திருக்குறள் எத்தனை பொருள்களை அடக்கி வைத்துள்ளது! எத்தனை பேர்கள் குழிக்குள் விழாமல் இருக்க ஒளிகாட்டுகிறது! வாழ்வியலுக்குத் திருக்குறள் போல வழி காட்டியாகும் பிறிதொன்றைத் தொட்டுக் காட்ட முடியுமா? வள்ளுவம் போலச் சிறந்த வழிகாட்டியும் உண்டோ?