உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வள்ளியப் பெருமிதம்

இந்தப் பள்ளிக்கூடம் பாலப்பர் நன்கொடையில் கிடைத்தது. இந்தக் கல்லூரி கண்ணப்பர் நன்கொடையால் வாய்த்தது. இப்பல்கலைக் கழகம் பனிமதியர் பரிவால் கிளர்ந்தது. இம் மருத்துவமனை மாறனார் நாட்டுக்கு மனமுவந் தளித்த கொடை.

இச்சோலையும்

வளக்கொடை.

காவும் சுடர்விழியார் வழங்கிய

இப்பந்தரும் நீர்நிலையும் அருளனார் அருளிய அருட்

கொடை.

இந்நூலகம், படிப்பகம் ஆகியவை நல்லையன் நல்கிய நலக்

கொடை.

இவ்விலவய உண்டுறை விடுதி வளவனார் வழங்கிய

வளர்கொடை.

இவ்விளையாட்டரங்கு இனியர் இசைந்தளித்த இன்கொடை. இம் மணிமன்றம் மணிவண்ணர் மாக்கொடை.

இக் கலைக்கோயில் கதிரவனார் கவின்கொடை!

இவ்வாறு நயத்தகு நிறுவனங்கள், நலத்தகை அமைப்புகள் எங்கெங்கெல்லாமோ காண்கின்றறோமே! நம் கண்முன் அவற்றின் நிறுவனர்கள் இல்லாமலும் புகழுடலுடன் பூத்துக் குலுங்கக் கண்டு பூரிப்பு அடைகின்றோமே!

செத்தும்

கொடைஞராய்ச் சிறக்கும் புதுப்புதுச் சீதக்காதியராய்த் திகழ்கின்றனரே! இப்பேற்றைச் செல்வமுடை யவர் ஒவ்வொருவரும் பெற்றனரோ? இலரே!

கோடி கோடியாகத் தேடிவைத்தவர் எத்துணையர்? பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துக் கேடுகெட்ட மாந்தர் எனப் பழிக்கப்பட்டுப் பாழானவர் எத்துணையர்?